அன்பு மதம்
- குருவாய்த் தெய்வமாய்க் கிருபை செய்கிறாய்
- தெய்வத்துவம் நிறைந்தே கருணைபுரிகிறாய்
- மாதா பிதா வாயனைத் துயிர்களுக்கும் அருள் தருகிறாய்
- அண்ட சராசரங்களில் ஏகமாய் வியாபித்திருக்கிறாய்
- அதிசய அற்புத லீலா வினோதங்கள் நடத்தி வருகிறாய்
- தெய்வாம்சம் உந்தன் தெய்வத்வம் என
- உணர வைத்து விட்டாய்
- உன் அன்பு மதம் மொழி இனத்திலே
- பன்மதப் பக்தர்களைப் பண்படுத்தினாய்
- பர்த்தியின் அவதாரமாய் இறங்கி, இரங்கி, வந்தே
- இன்னுயிர்க்கு இனிமையே செய்வித்தாய்
- மனம், மெய், மொழிகளால் உன்னைத் துதித்தவர்க்குச்
- சத்தியமான சாத்தியம் ஆகினாய்
- தெய்வச் சகாவாய்ச் சகாயம் செய்கிறாய்
- மும்மலங்கள் நீக்கி முக்திபெற அருள்கிறாய்
- முதலும் முடிவுமான முக்கண்ணனாய்த் தெரிகிறாய்
- முன்னுரை முடிவுரையாய் முகுந்தனாயருள்கிறாய்
- பன்மதப் பக்தருக்கும் அவரவர் தெய்வமாய்க்
- காட்சி தந்து அதிசயம் செய்கிறாய்
- ஸ்ரீ சத்திய சாயி நாத குரு தெய்வமே
- உனக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.