நீ நினைத்தது மட்டிலும்

 • திருவே வுன் திருவருளுலகில் உன் திவ்ய நாமம்
 • சொல்ல வைத்து மகிழச்செய்தது
 • உருவாய் மனிதச் சட்டையில் வந்தெமை
 • உய்வித்த துன்னன்புக் கருணையின் எல்லையதுவே
 • கருமுதல் திருவரை காத்து ரட்சிக்கின்றாய் ரட்சகனாய்
 • மரு மதியுன் முகம் சொல்லும் பக்தர்களவரவர்க்கு ஆயிரம்
 • அர்த்தங்கள் பாவனையாய் வருவினைகளகற்றி
 • நற்பவி யளித்திட உன்னைத் தவிர ஏது கதி
 • தருவரங்கள் நீ நினைத்தது மட்டிலும்
 • தானென உணரச் செய்தாய்
 • சேவைப்பணிகளாற்றி முன்வினைகள் கலைந்திட
 • அருள்வித்தாய் அற்புதங்க ளளித்திட்டாய்
 • கல்வி குடிநீர் மருத்துவம் இசையெனச் சேவைகளை
 • வியாபித்து வியக்க வைத்தாய்
 • பஜன் நாமஸ்மரணை நாம சங்கீர்த்தனம்
 • செபம் தியானத்தில் ஆத்ம நிவேதனமளித்தாய்
 • மலர் மாலைகள் உதிரிப்பூக்களிலும்கூட
 • உயிரில் கலந்துறவாடுகிறாய் அதிசயிக்க வைக்கிறாய்
 • அன்பு மதம் மொழி இனம் ஒன்றாயிணைத்து சாயி
 • உலகம் சாயி குடும்பம் ஒருங்கிணைத்தாய்
 • சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையைப் போற்றி
 • மனித மாண்பு வளர்த்திட்டாய்
 • சகாவாய்த் தாயுமானவராயும் கருணை செய்வித்தாய்
 • பிரசாந்திக் கருவறைத் தெய்வமுந்தனரு ளொன்றே போதும்
 • இப்பிறவிப் பயனெய்திடவே
 • உன் திருவடித் தாமரை மலர்களுக்கு
 • ஆத்மவந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0