நினைத்தாலே இனிக்கும்

 • மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும்
 • மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை
 • நினைத்தாலே இனித்திடும்
 • உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும்
 • உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில்
 • பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது – அது
 • பெரிதெனவே புரியும்
 • உன் நாமஸ்மரணையில் நாமணக்கும் – மனம்
 • இனிக்கும், சுபிட்சமாகும்
 • உன் பஜனைப் பண்களிசைக்கையில் அவரவர் தெய்வமாய்
 • காட்சிதரும் தெய்வக்கடாட்சம் புலப்படும், புரிந்திடும்
 • நகர சங்கீர்த்தனங்களிலுன் நர்த்தனம்
 • நடையாயுடன் பயணிக்கும்
 • உன் தியானத்தில் மோனத்தவம் சித்திக்கும்
 • சிந்தனையிலுன் ரூபமது காட்சி தந்து சாட்சியாய் நிற்கும்
 • நாராயண சேவைகளில் ஆன்ம பலத்துடன்
 • ஆத்மார்த்த பரமார்த்த ஆனந்தம் கிட்டியே
 • ஆத்மாவிலூடுருவும்
 • உன் ஸ்பரிசனம் தரிசனம் சம்பாஷனத்தில் சாத்வீகம்
 • சாத்தியமாகிச் சங்கமிக்கும்
 • நினைக்கும் நல்லெண்ணங்கள் சாத்தியமாகும் – உன்
 • படைப்பில் அது சத்திய சரித்திரமாகும்
 • அதிலும் உன் கருணை அன்பு பக்தியில் மனது பரவசிக்கும்
 • உன் மலரடி தேடி நாடி ஓடி வந்து பிரசாந்தியில்
 • பிரவேசிக்கும், பிரகாசிக்கும், பிரவாகிக்கும்
 • உனைத்தொழுது பணிதலன்றியுன் நற்பணிகளாற்றுவதன்றி
 • உன் வேலை வணங்குவதன்றி வேறு வேலை ஏது
 • சாயிவேலனே
 • உனது அதிஅற்புதச் சிருங்காரரூபம் உயிரினிலே உலா வரும்
 • அந்நிலாவிலும் வலம் வரும், அச்சூரியனிலும் ஒளிதரும்
 • காற்றினிலும் சுகந்தரும் விண்வரை பரவிடும்
 • உலகில் இயற்கை எல்லாம் நலம் பெறும்
 • உனதருட்கருணை அருள் வளம் பல நல்கும்
 • நற்பவி நடக்கும், உன் அபயஹஸ்தம் ஆசி தரும்
 • ஆனந்த வாழ்வியல் கிட்டி அகிலமெல்லாம் தழைத்திடும்

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0