நினைத்தாலே இனிக்கும்
- மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும்
- மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை
- நினைத்தாலே இனித்திடும்
- உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும்
- உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில்
- பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது – அது
- பெரிதெனவே புரியும்
- உன் நாமஸ்மரணையில் நாமணக்கும் – மனம்
- இனிக்கும், சுபிட்சமாகும்
- உன் பஜனைப் பண்களிசைக்கையில் அவரவர் தெய்வமாய்
- காட்சிதரும் தெய்வக்கடாட்சம் புலப்படும், புரிந்திடும்
- நகர சங்கீர்த்தனங்களிலுன் நர்த்தனம்
- நடையாயுடன் பயணிக்கும்
- உன் தியானத்தில் மோனத்தவம் சித்திக்கும்
- சிந்தனையிலுன் ரூபமது காட்சி தந்து சாட்சியாய் நிற்கும்
- நாராயண சேவைகளில் ஆன்ம பலத்துடன்
- ஆத்மார்த்த பரமார்த்த ஆனந்தம் கிட்டியே
- ஆத்மாவிலூடுருவும்
- உன் ஸ்பரிசனம் தரிசனம் சம்பாஷனத்தில் சாத்வீகம்
- சாத்தியமாகிச் சங்கமிக்கும்
- நினைக்கும் நல்லெண்ணங்கள் சாத்தியமாகும் – உன்
- படைப்பில் அது சத்திய சரித்திரமாகும்
- அதிலும் உன் கருணை அன்பு பக்தியில் மனது பரவசிக்கும்
- உன் மலரடி தேடி நாடி ஓடி வந்து பிரசாந்தியில்
- பிரவேசிக்கும், பிரகாசிக்கும், பிரவாகிக்கும்
- உனைத்தொழுது பணிதலன்றியுன் நற்பணிகளாற்றுவதன்றி
- உன் வேலை வணங்குவதன்றி வேறு வேலை ஏது
- சாயிவேலனே
- உனது அதிஅற்புதச் சிருங்காரரூபம் உயிரினிலே உலா வரும்
- அந்நிலாவிலும் வலம் வரும், அச்சூரியனிலும் ஒளிதரும்
- காற்றினிலும் சுகந்தரும் விண்வரை பரவிடும்
- உலகில் இயற்கை எல்லாம் நலம் பெறும்
- உனதருட்கருணை அருள் வளம் பல நல்கும்
- நற்பவி நடக்கும், உன் அபயஹஸ்தம் ஆசி தரும்
- ஆனந்த வாழ்வியல் கிட்டி அகிலமெல்லாம் தழைத்திடும்
– தமிழரசி பாலசுப்பிரமணியம்