சாதகப்பறவையாய்…

Sairam! This is available only in Tamil*

  • உன்னைக் காதலனாய், தோழனாய், குழந்தையாய், சேவகனாய் இன்னும் பல வடிவில் கண்டவன்தான் கவி அரசன் பாரதிபார்த்தனுக்குப் பாடம் சொல்ல பரமன் நீ ஆனாய் சாரதி!
  • கீதையில்நீ சொன்னவை அத்தனையும் உண்மையில் நிகழ்த்துவது
  • எளிதென்று உணர்த்தவே உன் வாழ்க்கையையே உதாரணமாய் அமைத்தது
  • உன் சித்தம்;
  • சாயீ! நீ எங்கள் சனாதனசாரதி!
  • உன் சரிதக் கடலில் மூழ்கி எழுந்தால் கிடைப்பவை அனைத்தும் முத்துகள்;
  • உன் பாதங்கள் தரும் நிம்மதி அதற்கீடாய் நான் கண்டதில்லை வேறு சன்னிதி;
  • சங்கநிதி பதுமநிதி வாய்த்தவர்க்கு உலகில் வாய்ப்பதென்ன சுகம்தான்,
  • அதுதான் நியதி;
  • அதுவே போதுமென்றால் அடங்கவேண்டும் உள்ளம், இல்லையே கிடைத்ததா
  • நிம்மதி!
  • ஸ்தூல வடிவில் நீ இருந்திட்டபோது உன் தரிசனம் கண்டு உள்ளம் உவகையில் நிறையும்,
  • சாயி சாயி என்றும் ஸகலமும் நீயென்றும் உதடுகள் உச்சரிக்க உணர்வுகள் மறையும்;
  • காதல் பெருக உள்ளம் கண்ணீரில் கரையும்;
  • ஆர்வம் பொங்கக் கண்கள் ஆசையில் அலையும்.
  • கால் வரை நீண்ட கனகாம்பர அங்கியும் கருத்த கார்மேகமென அடர்ந்த தலை முடியும்
  • பூரண நிலவென அருள் பொழிகின்ற முகமும் நிலவின் கறையொக்கும் கன்னத்து மருவும் இதழ்க்கடை ஓரத்தில் ஈர்க்கும் புன்முறுவலும் கருணை பொழிகின்ற கருங்குவளைக் கண்ணும் காற்றில் மிதப்பதுபோல் தவழ்ந்துவரும் திருவடியும் உதிமழையும் அருள்மழையும் உருவாக்கும் திருக்கரமும்
  • எழுதிய சித்திரமாய் இன்னமும் அழியாமல் இதயத்தில் குடியிருக்க ஏங்கி மனம் துடிக்க ‘மீண்டும் வந்திடுவேன்’ என்று நீ சொன்ன வாக்கினால் வாழ்கின்றேன்
  • வருகையை எதிர்நோக்கி மழைநீரை எதிர்நோக்கும் சாதகப் பறவை போல!
  • ஷிர்டியில் சொன்னபடி பர்த்தியில் வந்துதித்தாய்,
  • வஜ்ரசங்கல்பம் உன்னதென்று தெரியும்;
  • இப்பிறவி நீ வரும்வரையில் நீண்டாலும் சரிதான், எடுக்கின்ற பிறவியிலே
  • வாய்த்தாலும் சரிதான், உனக்கும் எனக்குமான உறவென்றும் தொடர்ந்திட
  • உன் திருத்தாள் பணிகின்றேன் உதவிடுவாய் ஸ்வாமி!
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0