திருவுள்ளம் வை

Sairam! This is available only in Tamil*

  • கற்பகத் தருவும் காமதேனுவும்
  • கேட்டதை மட்டும் தருமாம்!கேட்காத பொருளைக்கூட உன் கருணை தருமே!
  • வண்டிப் பாரங்களில் நிரப்பி நீ தரக் காத்திருக்கிறாய், அது மட்டுமா!
  • உன்னையே கூட நீ தருவாய் ஏந்துவதற்கு ஏற்ற பாத்திரமாய்
  • நானும் இருந்தால்தானே அது கூடும்!
  • நான் கேட்கும் பொருளெல்லாம் வெறும் குப்பையாய்ப் போக எவ்வளவு ஏமாற்றம் உனக்கு!
  • ஆண்டவனாய் உன்னை நான் தேடுகிறேனோ இல்லையோ
  • அது எவ்வளவு உண்மையோ பொய்மையோ
  • நீ ஒரு நல்ல தொண்டனை இன்னமும் தேடிக்கொண்டிருக்குறாய
  • என்பது தானே நிஜம்!
  • கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று சொன்ன பட்டினத்து அடிகளும்
  • உன் பக்தன், உன்னைப் போல் நொந்தவன்தான் பழமரமாய் ஊர்நடுவே பழுத்திருக்கும் வள்ளல் நீ,
  • பாராமல் பாலையிலே முள் மரத்தில் அமர்ந்து முனகுகின்ற முட்டாள் பறவை நான் உய்வது எப்படி? உன்னால் தான் அதுவும் முடியும் என்று இருக்கையிலே
  • உருப்பட ஒருப்பட உள்ளம் நீ வைப்பாய!
  • அவனருளாலே அவன் தாள் வணங்கி எனச் சொன்னவன் என் பாட்டன்
  • மாணிக்கவாசகன் எனவே என் ஸ்வாமி திருவுள்ளம வை
  • திரும்பவும் சொல்கிறேன் திருவுள்ளம் வை,
  • திருந்தி விடுவேன் உன் கருணை அமிழ்தம்
  • அருந்தி விடுவேன் உன் திருவடிகளோடு ஒன்றிப் பொருந்தி விடுவேன்.
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0