சகலகலாவல்லியே
- சகல சித்தியளிக்கும் ஆதிசாயிதேவிக்கு ஆனந்த வந்தனம்
- கற்வர் தமக்குக் கற்பகக் கலைநிதி அருளும் கலைமகளே
- உனக்கு அனந்தகோடி வந்தனம்
- கொற்றவை நாயகியே கொலுவிருக்கும்
- வாணி சரஸ்வதியுனக் கன்பான வணக்கம்
- கற்றவர் போற்றி மகிழும் மாபெரும் கலைகளைப்
- படைத்தவளே அஷ்டலட்சுமிகளாயு மருள்
- பாலிப்பவளே உனக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம்
- உற்றவர் நோக்கி உவந்திடுமாறு உற்ற துணையாய்
- வந்தருள்வாயே உனக்கு உற்சாக வந்தனம்
- ஞானத்தைப்பால் கலந்தூட்டி நற்றமிழைத் தேன்
- கலந்தூட்டித்தான் நல்வாக்கு நவில வைத்த
- கலைவாணித் தாயுனக்குக் காலகால
- காலகாலமெல்லாம் நற்பவியாம் வணக்கங்கள்
- வான்முட்டுமுன் வற்றாக்கருணைதனைத் தானமாய்த்
- தருவாயே தாரிணிதேவியே தயை தந்தருள்வாயே
- நற்றமிற் கவிதைகள் பற்பலபுனைந்துனைப்
- பண்பாடித் துதிதித்திட வரம்தந்து வாழ்வியலில்
- வளம் தருவாயே ஸ்ரீ சத்யசாயீஸ்வரி
- சகலகலாவல்லித்தாயே சரணமம்மா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்