உன் பாத தரிசனம் (பொருளாட்சியாம் பொள்ளாச்சியில் கிட்டிய தயை)
- சுவாமி உன் பாத தரிசனம் பெற்றுள்ள பாக்கியம்
- கிட்டியததால் பாதாரவிந்தம் தொழுது பணிந்தெழுந்ததினால்
- ஆதாரசொந்தம் நீ என்று உணர முடிந்தது – அக்கேதாரன்
- திருவடி பற்றிய உணர்வு உணர்ந்தது
- புனிதமென்மையது என்று உணர்ந்தேன் சுவாமி
- தொன்மை வேறு ஏது வேண்டுமென் றறிந்தேன் சுவாமி
- வாய்மையாய் வாழ வழி வகுத்த தூய்மையது சுவாமி
- பொய்மையே கூடாதென நீ மொழிந்தது வளர்ந்தது ஸ்வாமி
- உன் பாத தரிசனம் பாவமது போக்கிடும் சரித்திரம்
- உன் பாத தரிசனம் நாவமுதா யினித்திடும் மகத்துவம்
- உன் பாத தரிசனம் என்மேல் உந்தன் கரிசனம்
- உன் பாத தரிசனம் என் சுவாமி நீ என்னும் பரிச்சயம்
- கேள்வி ஞானத்தால் பெற்றதில்லை உன் பாதாரவிந்தம்
- வேள்வி அது என் முன்சென்மக் கொடுப்பினைப் பந்தம்
- முகம் புதைத்துன் பதமலரில் பணிந்து எழுந்தததை – என்
- அகம் நினைத்துன் முகமலரில் நிலைத்திருக்குமிப்படிப்பினை
- நானும் உன் பாதத்தாமரை தொட்டு வணங்கினேன் – நீயும்
- என் உச்சி தொட்டு ஆசி செய்து உள்ளாய்
- நானும் இதை எச்சென்மத்திலும் மறவேன் சுவாமி
- நீயும் என்னை என்றென்றும் கவசமாய்க் காத்தென்
- சந்ததிகளை வாழச் செய்திடுவாய் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்