உன் பாத தரிசனம் (பொருளாட்சியாம் பொள்ளாச்சியில் கிட்டிய தயை)

  • சுவாமி உன் பாத தரிசனம் பெற்றுள்ள பாக்கியம்
  • கிட்டியததால் பாதாரவிந்தம் தொழுது பணிந்தெழுந்ததினால்
  • ஆதாரசொந்தம் நீ என்று உணர முடிந்தது – அக்கேதாரன்
  • திருவடி பற்றிய உணர்வு உணர்ந்தது
  • புனிதமென்மையது என்று உணர்ந்தேன் சுவாமி
  • தொன்மை வேறு ஏது வேண்டுமென் றறிந்தேன் சுவாமி
  • வாய்மையாய் வாழ வழி வகுத்த தூய்மையது சுவாமி
  • பொய்மையே கூடாதென நீ மொழிந்தது வளர்ந்தது ஸ்வாமி
  • உன் பாத தரிசனம் பாவமது போக்கிடும் சரித்திரம்
  • உன் பாத தரிசனம் நாவமுதா யினித்திடும் மகத்துவம்
  • உன் பாத தரிசனம் என்மேல் உந்தன் கரிசனம்
  • உன் பாத தரிசனம் என் சுவாமி நீ என்னும் பரிச்சயம்
  • கேள்வி ஞானத்தால் பெற்றதில்லை உன் பாதாரவிந்தம்
  • வேள்வி அது என் முன்சென்மக் கொடுப்பினைப் பந்தம்
  • முகம் புதைத்துன் பதமலரில் பணிந்து எழுந்தததை – என்
  • அகம் நினைத்துன் முகமலரில் நிலைத்திருக்குமிப்படிப்பினை
  • நானும் உன் பாதத்தாமரை தொட்டு வணங்கினேன் – நீயும்
  • என் உச்சி தொட்டு ஆசி செய்து உள்ளாய்
  • நானும் இதை எச்சென்மத்திலும் மறவேன் சுவாமி
  • நீயும் என்னை என்றென்றும் கவசமாய்க் காத்தென்
  • சந்ததிகளை வாழச் செய்திடுவாய் சுவாமி.
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0