அலைகளில்

  • பஞ்சபூதங்களையுமாட்கொண்டு வழி நடத்துகிறாய்
  • வளிமண்டலத்தில் உன் ஓம்கார ஒலிதான்
  • ஓசையாய் இசைவித்து அசைய வைக்கிறது
  • வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்கள் “சாய்ராம்’
  • என்று சொல்லிக் கண்சிமிட்டி ஒளிர்கிறது
  • நிசப்த ஆகாயத்திலுன் நாமஸ்மரணை, செபம்,
  • தவம், அலைக்கற்றைகள், சங்கமிக்கிறது
  • அக்னியின் கனலாயுன் அக்னித்வம் ஒளிர்கிறது
  • கடல் அலைகளின் நீர்த்துளிகளிலுன் பிரம்மமே ஆர்ப்பரிக்கிறது
  • காற்றினிலே வியாபகமாய்க் கலந்துள்ள உன்னை ஞாபகமாய்
  • எண்ண வைக்கிறது
  • பூமிதனில் அனைத்துயிர்களின் சிருஷ்டி கர்த்தாவாய்த்
  • திண்ணமாய்த் திகழ வைக்கிறது
  • எங்குமெதிலும் எப்போதும் முப்போது முன்
  • தனிக்கருணை அருள் வெள்ளமாய்ப் பாய்ந்து அழகூட்டுகிறது
  • அன்பு மழையில் நனைந்து பரவசிக்கிறது
  • ஒவ்வொரு விடியலையும் உயிர்ப்பிக்கிறது
  • ஸ்ரீ சத்யசாயி தெய்வமே உன் சங்கல்பம்
  • சாஸ்வதமாய் நிலைக்க வேண்டும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0