அலைகளில்
- பஞ்சபூதங்களையுமாட்கொண்டு வழி நடத்துகிறாய்
- வளிமண்டலத்தில் உன் ஓம்கார ஒலிதான்
- ஓசையாய் இசைவித்து அசைய வைக்கிறது
- வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்கள் “சாய்ராம்’
- என்று சொல்லிக் கண்சிமிட்டி ஒளிர்கிறது
- நிசப்த ஆகாயத்திலுன் நாமஸ்மரணை, செபம்,
- தவம், அலைக்கற்றைகள், சங்கமிக்கிறது
- அக்னியின் கனலாயுன் அக்னித்வம் ஒளிர்கிறது
- கடல் அலைகளின் நீர்த்துளிகளிலுன் பிரம்மமே ஆர்ப்பரிக்கிறது
-
- காற்றினிலே வியாபகமாய்க் கலந்துள்ள உன்னை ஞாபகமாய்
- எண்ண வைக்கிறது
- பூமிதனில் அனைத்துயிர்களின் சிருஷ்டி கர்த்தாவாய்த்
- திண்ணமாய்த் திகழ வைக்கிறது
- எங்குமெதிலும் எப்போதும் முப்போது முன்
- தனிக்கருணை அருள் வெள்ளமாய்ப் பாய்ந்து அழகூட்டுகிறது
- அன்பு மழையில் நனைந்து பரவசிக்கிறது
- ஒவ்வொரு விடியலையும் உயிர்ப்பிக்கிறது
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமே உன் சங்கல்பம்
- சாஸ்வதமாய் நிலைக்க வேண்டும் சுவாமி.