சாயி நாமம்
- சாயி நாமம் அது ஜென்மபந்த சங்கல்பம்
- சாயி நாமஸ்மரணை ஆத்மாவின் ஜென்மாந்திரச்
- சிவ சந்தர்ப்பம்
- சாயி கீதம் அது பூர்வ ஜென்ம சாந்நித்தியம்
- சாயின் தரிசனம் பிறவிப்பயனின் பெரும்பேறு
- சாயி ஸ்பரிசனம் உயிர் உணர்வில் கலந்துவிட்ட
- உயிரோவியம்
- சாயி சம்பாஷனம் நம் புண்ணிய தர்மம்
- சாயி சுதர்சனமிம்மேதினிக்குக் கிட்டிய சனாதனம்
- சாயி பிரசாந்தம் உலகில் உயிர்களை எட்டிய பிரகாந்தம்
- சனாதன சாரதியாய் ஆன்மீக பக்திக்குக் கிட்டிய பிரசாதம்
- சத்ய தர்ம பிரேமை சாந்தி அன்பு அகிம்சையின் அவதாரம்
- ஒரே பரப்பிரம்மமான பவதாரம்
- பர்த்தி ஸ்ரீ சத்ய சாயிநாதா உன் கீதைப்பாதையின்
- பிரபாவம்தானெங்களின் சாத்வீகப் பிரகாரம்
- நீ தானெங்களின் ஆத்மப்பிரசாதம், அமிர்தகலசம், அமுதசுரபி
- நீ யிருக்கவுன் கருணைத்துணையிருக்கக்
- குறையொன்றுமில்லை ஸ்ரீ சத்யசாயீசனே சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்