பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தமிழ்நாட்டு திக்விஜயம்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தமிழ்நாட்டு திக்விஜயம்

யுகாவதாரமான நமது பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் தனிப்பெருங் கருணையினால் எண்ணற்ற முறை தமிழ்நாட்டிற்கு திக்விஜயம் செய்துள்ளார். அவர் சர்வ லோக சஞ்சாரி. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் கூட இருந்ததாக சான்றுகள் உண்டு. அப்படிப்பட்ட அவதார புருஷரின் விஜயங்களைப் பற்றி எழுதி வைத்தவர் மிகச் சிலரே. பல குடும்பங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன. நமது அன்பு இறைவனின் பாத கமலங்களை மிகப் பணிவன்புடன்  பற்றி அவரது தமிழ்நாட்டு திக்விஜய வரலாற்றினை இந்த தமிழ் புதுவருடத்தில்   ஆரம்பித்து, தொடர்ச்சியாக எழுத ஆசீர்வதித்து, கை கொடுக்குமாறு வேண்டி நிற்கிறோம். கூடவே மிக அரிய புகைப் படங்களும் பகவானின் ஆசியுடன் வெளிவரும்.

யுகாவதாரமான நமது பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் தனிப்பெருங் கருணையினால் எண்ணற்ற முறை தமிழ்நாட்டிற்கு திக்விஜயம் செய்துள்ளார். அவர் சர்வ லோக சஞ்சாரி. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் கூட இருந்ததாக சான்றுகள் உண்டு. அப்படிப்பட்ட அவதார புருஷரின் விஜயங்களைப் பற்றி எழுதி வைத்தவர் மிகச் சிலரே. பல குடும்பங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன. நமது அன்பு இறைவனின் பாத கமலங்களை மிகப் பணிவன்புடன்  பற்றி அவரது தமிழ்நாட்டு திக்விஜய வரலாற்றினை இந்த தமிழ் புதுவருடத்தில்   ஆரம்பித்து, தொடர்ச்சியாக எழுத ஆசீர்வதித்து, கை கொடுக்குமாறு வேண்டி நிற்கிறோம். கூடவே மிக அரிய புகைப் படங்களும் பகவானின் ஆசியுடன் வெளிவரும்.

 

முதல் அவதாரம் மகாராஷ்டிரத்திலும், இந்த அவதாரம் மதராஷ்டிரத்திலும்  தோன்றியுள்ளது என பகவான் ஒரு அமுத உரையில் கூறி இருந்தார். திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, ஹைதராபாத் சமஸ்தானங்களையும், பிரெஞ்சு ஆட்சியில் இருந்த பாண்டிச்சேரியையும் தவிர்த்து தென் இந்தியா அனைத்தும் அந்தக் காலத்தில், மதராஸ் பிரெசிடென்சியில் அடங்கியிருந்தது. அதனால் தான் பகவான் அவ்வாறு உரைத்தார். மதராஸ் , கரூர், மதுரை போன்ற பல இடங்களிலிருந்து ‘அதிசய பையன்’ (Wonder boy), ‘பால சாய்’ என்றும் அழைக்கப் பட்ட ஒருவர் பல வகைப் பட்ட  நோய்களைத் தீர்க்கும் வைத்தீஸ்வரனாக வந்திருப்பதை அறிந்து, தீராத உடல் நோய், மன நோய், பல் வேறு துன்பங்களுக்கு விமோசனம் தேடி, புட்டப்பர்த்தியை நோக்கி செல்லலாயினர். குணமானதும் மற்றவரிடம் கூறி, பலர் பக்தி என்னும் ஆன்ம மருந்து பெறலாயினர். ‘திரும்பத் திரும்ப எங்கள் ஊருக்கு வாருங்கள்’ என்று பகவானிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தனர்.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கி நாயன்மார்கள், ஆழ்வார்கள் மூலம் இறை பக்தியில் திளைத்து தெய்வத்துடன் நெருங்கிய ஆன்மீக வாழ்வில் லயித்திருந்தனர் தமிழர்கள். அத்தகைய தமிழ் நாட்டுடன் சிவசக்தி சொரூபனான ஐயன், தான் அவதாரமெடுத்து வந்திருப்பதை அறிவித்த சூட்டோடு தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதில் அதிசயம் ஏதுமில்லையே!

பழம் பெரும் பக்தரான சுப்ரமணியச்  செட்டியாரின்  சகோதரியான கரூர் ராமலக்ஷ்மி அம்மையாரின் கனவில் தோன்றி பெனுகொண்டா வழியாக  புட்டபர்த்தி வருமாறு அழைத்தார் நம் மாதவன். கிருஷ்ண பக்தையான அவரும் 40 நாட்கள் தங்கி தீராத நோய் குணமாகி வந்ததும் செட்டியாரும் புட்டபர்த்தி சென்று  தங்கினார்.

இவ்வாறு இறைவன் கனவில் வந்தது உண்மையில் நேரடி வருகை அல்லவா? அப்படியாயின், 1940ல், ஐயன் கரூர் வந்து அழைப்பு விடுத்தார் என்றாகிவிடுகிறது. 1940ல் அவதாரப் பிரகடனம் செய்தவுடனேயே மேற்குறிப்பிட்ட காரணத்தினால். கரூர், மதுரை போன்ற பல இடங்களில் சாயி பக்தர்கள் உருவாகி, புட்டபர்த்தி செல்வதும் வருவதுமாக இருந்தனர்.

பகவான் தாமே நேரில் 1942ல், எழும்பூர் வந்து தங்கி இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் மிகச் சிறு இளைஞனாக  இருக்கும் போதே தர்ம ஸ்தாபனத்திற்காக, தன் அவதார திருப்பணி ஆழமாக ஊன்றி செழிப்பதற்காக தமிழ்நாட்டின் நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள், ‘பட்டி தொட்டி தோறும்’ என்று கூறுவது போல சாலை கூட இல்லாத பல இடங்களில் தன் திவ்விய பாதச் சுவடுகளைப் பதித்திருக்கிறார். அந்தக் காலத்தைய பழம் பெரும் பக்தர்களின் ஆழ்ந்த அன்பும் தூய பக்தியுமே இந்த அன்பு தெய்வத்தைக் காந்தமெனக் கவர்ந்திழுத்ததெனக்  கூறினால் மிகையாகாது. அவர்களுக்கு நம் நன்றிக் கடன்  உரித்தாகுக.  ஒரு மாமன்னன் குறுமன்னர்கள் மீது போர் தொடுத்ததை, ஒரு நாடு இன்னுமொரு நாட்டைக் கபளீகரம் செய்ததை, வல்லரசுகள் மோதிக்கொண்டதை அறிவது தான் ‘சரித்திரம்’ என எண்ணுகின்றோம். ஆழ்ந்து சிந்தித்தோமானால்  நம் சரித்திர நாயகனின் கதை (His Story) தான் அர்த்தம் பொதிந்த சரித்திரம் (History).

முதன் முதலில் தெரிய வந்துள்ள விஜயமானது சென்னையில் 1942ல் ஸ்ரீ ராகவ நாயுடு என்பவரின் வீராசாமித் தெருவிலுள்ள எழும்பூர் வீட்டிற்குத் தான் என அறிய வந்துள்ளது. இங்கு பஜனை (துதிப்  படல்கள்) நடந்தபோது வந்து கலந்து கொண்டவர் பலர். அருகாமையில்  இருந்த வோல்கார்ட் பிரதர்ஸ் என்று அழைக்கப் பட்ட பார்த்தசாரதி   முதலியார், நாகரத்தினம் முதலியார் வந்து பகவானின் அருட் பார்வையும் ஆசியும் பெற்றனர். தொடர்ந்து பார்த்தசாரதி   முதலியார் புட்டபர்த்தி சென்ற போது ஒரு ஆப்பிள் பழத்தை சிருஷ்டித்துக் கொடுத்து  அவரது நெடுநாளைய ஆஸ்த்மா நோயை அறவே அழித்தார் நம் சாய் பகவான். அவரது அன்னை கண் புரை மறைத்து குருடாக இருந்த நிலையில் இருந்தார். கண்களின் மேல் மல்லிகைப்பூ  வைத்துக் கட்டி நம் சாய் செய்த சிகிச்சையினால் மீண்டும் கண் பார்வை தெளிவாகப் பெற்றார்.

ராகவ நாயுடுவின் உறவினரான பர்மாவிலிருந்து அனைத்தும் இழந்த  அகதிகளாக வந்த கமலம்மா, மூத்த பெண் சந்திரம்மா, மாப்பிள்ளை ஆளவந்தான் நாயுடு, மகன் தீனதயாளுவும் இருந்தனர்.  பின்பு வருவதாக இருந்த கணவர், ராஜ சேகர நாயுடு வந்து சேராத கவலையில் மூழ்கி இருந்த கமலம்மாவைப் பார்த்து, ‘மாண்டலே’யிலிருந்து கடும் துன்பங்களைத் தாண்டி அவர்கள் வந்து சேர்ந்ததை விவரித்தார் பகவான். அவர்கள் அனைவரும் பிரமிப்புக்குள்ளாயினர். ஏனெனில், பர்மாவிலிருந்து, அதுவும் மாண்டலேயிலிருந்து தப்பித்து வந்ததைப் பற்றி அவரிடம் எதுவும் கூறாத போது எவ்வாறு எல்லாவற்றையும் தத்ரூபமாக விவரிக்கிறார் என வியந்தனர். பகவான் அறியாதது என்ன?எப்போது கணவர் வந்து சேர்வார் என்று கமலம்மா வினவிய போது, ‘அவர் சன்யாசம் பெற்று விட்டார். மறந்து விடுங்கள்’, என்று கூறி விட்டார். பின்னர் ஒரு பச்சை ஆப்பிளை சிருஷ்டித்துக் கொடுத்து கமலம்மா மட்டுமே, அதை உண்ணுமாறு பணித்தார். ‘நான் கூடவே இருந்து காப்பாற்றுவேன்’ என்று அபயகரமும் கொடுத்தார். ஆப்பிள் சாப்பிட்ட பின் படிப் படியாக கவலைகள், ஞாபகங்கள் மறைந்தன. ஸ்வாமி காட்டிய வழியினால் கமலம்மாவிற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாதா மாதம் பென்ஷன் கடைசி வரைக்கும் கிடைத்து வந்தது.

இன்னும் பலர் ராகவ நாயுடு வீட்டில் பகவானை சந்தித்து பக்தராகி இருக்கலாம். ஆனால் தகவல்கள் கிடைக்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0