படிப்படியாய் ஸ்வாமி

  • திருப்பதிப்படி
  • திருத்தணிப்படியாய் நான்
  • நேசிக்கும் ‘படி’ என்வீட்டு
  • வாசற்படிகளின்
  • இடைப்’படி’!
  • இந்தப்படியில் அமர்ந்து
  • பின்படிச்சுவரில் சாய்ந்து
  • முன்படியில் காலூன்றி
  • ஸ்வாமியை சதாநான்
  • யோசிக்கும்படிஎன்பதால்நான்
  • நேசிக்கும்’ படி’!
  • பர்த்தி நாதனுக்காய்
  • அவ்வப்போது
  • கவிதை எழுதுவதும்
  • கானம் பாடுவதும்
  • மானசீகமாய்ப் பேட்டி
  • எடுப்பதும்
  • இங்கமர்ந்து கொண்டுதான்.
  • அந்திப்போதில்
  • அன்றாடப்பணிச்சுமை
  • இறக்கி
  • ஆசுவாசமாய் அமர்ந்து
  • நீலவானும் பசுமரங்களும்
  • பார்த்தபடி
  • பர்த்திபோய்வந்த
  • தோழியரோடு
  • கடவுளின் சேதிகள் பேசிக்
  • களிகொள்வது இங்குதான்.
  • இருள்கவியும் மாலையில்
  • ஒரு பொடிநடை நடந்து
  • இளைப்பாறியதும்
  • ஸ்வாமியின் லீலைகளை
  • எண்ணிக்
  • களிப்பாகியதும் இங்குதான்.
  • எனக்குள்
  • முட்டிமோதும்கேள்விகளுக்கு
  • மாதவசாயி எனக்கு
  • மௌனபதிலளிப்பது
  • இங்குதான்.
  • பல நிலையிலும்
  • எனக்கிது
  • பர்த்திப்படி!
  • பக்கத்தில் வேப்பமரம்
  • மதிலருகே சரக்கொன்றை
  • அங்கங்கே மின்னலிடும்
  • ஆகாயம் பார்த்தபடி
  • சனாதனசாரதியை
  • வாசித்தபடி சாயி
  • பார்த்தசாரதியை
  • யோசித்தபடி இங்கு
  • அமரும் பொழுதெல்லாம்
  • அமிர்தமயமானவை!
  • போதும்வரை எனக்குள்
  • போதம் வளர்க்கின்ற
  • போதிப்படி!
  • ஒரு தவச்சாலையின்
  • நிசப்த நிர்மலத்தில்
  • தியானிக்கும் பேரமைதி
  • படிந்திருக்கிறது இங்கே.
  • இங்கமர்ந்த பொழுதுகளில்
  • ஸ்வாமிதந்த காட்சிகள்
  • அநேகம்
  • நீலதேகசிவனாய்கண்ணனாய்
  • ஆண்டாளாய் காளியாய்
  • சர்வரூப சாயியாய்
  • ஸ்வாமிதந்த காட்சிகள்
  • எத்தனை!
  • பால்கீரைபணியாட்கள் என்று
  • பக்கத்தில் சிலச்சிலர்
  • எனைக்கடந்து போனாலும்
  • பிரம்மமாய்க் கிடந்தபடி
  • பேரின்பம் நுகர்ந்தபடி
  • கிடக்கும்’படி’ யார்க்கும்
  • கிடைக்காத’படி’.
  • அடுப்படியும் அடுத்தபடிக்
  • காரியமும் மறந்து
  • ஆண்டவன் நாமத்தில்
  • ஆனந்த ரூபத்தில்
  • லயித்துக் கிடக்கும்
  • லயப்படி இப்படி.
  • தெய்வ அவதாரத்திற்குத்
  • தொடர்புடைய
  • தூணும் வாயிலும்
  • பூணும் மாலையும்
  • அடுத்த பிறவியிலும்
  • அவதார மூர்த்தியோடு
  • தொடர்ந்து பிறக்குமென்பார்
  • அப்படி
  • அயோத்திப்படி
  • துவாரகைப்படியாய்
  • இப்படி இருந்திருக்கக்கூடும்!
  • புராதனக் கோயிலொன்று
  • புதைந்திருப்பது தெரியாமல்
  • பூமியின்மேல் பலர்
  • நடப்பதுபோலும்
  • இதன்மேலும் பலர்நடக்கலாம்
  • இதன் ஆன்மா
  • காயப்படுவதில்லை அதனால்..
  • சித்தம் சலனமற்று
  • சித்தனிடம் ஒடுங்க
  • சித்தித்தரும்படி சிவப்படி
  • சிவசக்திப்படி!
  • என் ஆன்மா
  • கதறும்போதெல்லாம்
  • என்னை ஸ்வாமி
  • ஆசுவாசப்படுத்தி ஆறுதல் தருவது இங்குதான்.
  • மிதிப்பட்டுவிட்ட எறும்பு
  • தாறுமாறாய் ஊர்வதுபோல்
  • குழப்பத்தில் மனம்
  • தடுமாறும்போதெல்லாம்
  • இங்கமர்ந்துகொண்டால்
  • மனம் யோகநிலை கொள்ளும்.
  • படிப்படியாய் ஸ்வாமி
  • எனக்குள் வளர்ந்து
  • கோயில்கட்டிக்
  • கும்பாபிஷேகம்
  • செய்துகொண்டது
  • இப்படியின் வாசத்தில்தான்.
  • வெளியுலகம்காண
  • வாய்ப்பில்லா எனக்கு
  • வெளியுலகம் காட்டும்
  • வெளிச்சப்படி.
  • உளுத்துப்போன கூட்டில்
  • முட்டிமோதும் இந்த
  • உயிர்ப்பறவை
  • வெகுபலவீனமாயிருக்கிறது.
  • கூடுவெடித்து
  • எப்போதும் அது
  • பறந்துவிடலாம் அதற்குள்
  • பலகாலும் புரிந்தஎன்
  • படித்தவத்திற்குப் பலன்
  • கிடைத்தாலும் கிடைக்கலாம்.
  • இப்படியில் அமர்ந்து
  • இப்படிக்கவிதை எழுதியதும்
  • ஸ்வாமி
  • செடியாயிருந்து
  • தலையசைத்தார்
  • பூவாய் மலர்ந்து
  • புன்னகைத்தார்.
  • ஒருவேளை நாளை என்
  • பரந்தாமனின்
  • பத்மபாதங்கள் இங்குபடலாம்
  • அதனால்
  • அப்போதைக்கிப்போதே
  • சொல்லிவைத்தேன்
  • படியே உனக்குப்
  • பலகோடி நமஸ்காரம்!
  • என்றும் சாயிசேவையில்
  • கவிஞர். பொன்மணி
  • – ஸ்ரீ சத்யசாயிகவிதைகள்.
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0