ஆன்ம சோதனை
சரபோஜி மகராஜா, சிவாஜி பரம்பரையில் வந்தவர்; மகராஜா, தியாகராஜரைத் தஞ்சைக்கு வரும்படி அழைப்புவிடுத்தார். நிதி அல்லது விலைமதிப்பு மிக்க வெகுமதிகளை அவருக்கு வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால் கவிஞரும், பாடகரும், முனிவருமான அவரோ அது தன்னை மயக்கித் தவறு செய்யத் தூண்டிவிடும் எனக்கருதி,”அந்த நிதி, ஆனந்தம் அருளும் இறைவனைவிடப் பெரிய நிதியா? அல்லது இறைவன் சந்நிதியைவிட அதிகப் பயனுடையதா?” என்று வினவினார். வினாவிலேயே விடையும் தெளிவாக இருக்கிறது. அந்த வெகுமதி மீதுக் கண் வைத்திருந்த தியாகராஜரின் சகோதரர், அவர் மன்னனின் தர்பாருக்குப் போக மறுத்ததைக் கண்டித்து சினந்தார். வீட்டுக்குள் வரக்கூடாது எனக்கூறி அவரைப் பிடித்திழுத்துக் கதவுக்கு வெளியேத் தள்ளிவிட்டார். அனைவரது ஆத்மாவாக இருக்கும் ராமனை தியாகையர் வழிபட்டு வந்தார்; அந்த ராமவிக்ரகத்தையும் ஆற்று வெள்ளத்தில் அவரது சகோதரர் எறிந்துவிட்டார்.

அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கையும், நகைப் பெட்டிகளையும் மன்னன் சிவாஜி, துகாராமுக்கு வெகுமதியாகக்கொடுத்து மரியாதை செய்ய விரும்பினான். ஆனால் துகாராமோ, “ராமா! எனதுக் கரங்களை உனது “பாதங்களிலிருந்து எடுக்கமாட்டேன்; ஏனெனில், உனது தெய்வீகப் பாதங்களைப் பற்றிய நான் வேறு பொருளைப் பற்றினால் அடுத்த நொடியே நீ என்னிடமிருந்து தப்பிக்கத் தயாராக இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்”, என்று கூறி அதைப் பெற மறுத்துவிட்டார்.

தியாகையர் இறக்கும் தருவாயில் அவரது மனைவி அவரது தலையைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அழுதபோது, அவளுடைய மூன்று கண்ணீர்த்துளிகள் அவரது முகத்தில் விழுந்தன. “ராமா! ராமா!” என்று ஆனந்தப் பரவசத்துடன் கூறிக்கொண்டிருந்த அவர், “நானோ ராமனுக்கு உரியவன் ஆனால் நீயோ இன்னும் காமனுக்கு உரியவனாக இருக்கிறாய்”,என்று வருந்திக் கூறினார்.
உலக மகிழ்ச்சியையும், உலகப் பொருளையும் நேசிப்பதை விட்டுவிட்டு இறைவனை நேசியுங்கள். ஒரு நொடியைக்கூட வெட்டிப் பேச்சிலோப் பொருளற்றப் புகழ்ச்சியிலோ வீணாக்க வேண்டாம். இறைவனுடைய சங்கல்பம் எதுவாக இருப்பினும் அதைத் தலைதாழ்த்தி ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது இறைவனே உங்களுக்கு வழிகாட்டி, காப்பாற்றுவார்.
Help Desk Number: