இயற்பகை நாயனார்

காவேரிபூம்பட்டினத்தில் வணிகர் குடியில் பிறந்தவர் இயற்பகையார். இவர் சிவனடியார்களுக்கு ஏவல் செய்வதையும் அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுப்பதையும் தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடைய பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சிவனடியார் போல் மாறுவேடம் தரித்து வந்து, இயற்பகையாரிடம் அவர் மனைவியை கேட்க அவரும் மறுக்காமல் சிவனடியாரிடம் தன் மனைவியை ஒப்படைத்தார்.

அவரது மனைவி முதலில் மனம் கலங்கினாலும் கணவன் சொன்னபடி செய்வதே கற்பின் திறமென்று தெளிந்து, வந்த அடியாரை வணங்கி நின்றாள். இதனை எதிர்த்த ஊர் மக்களையும் வெட்டி வீழ்த்தி, சிவனடியாருக்குக் காவலாகச் சென்றார். சிவனடியார் நாங்கள் இனி பத்திரமாகச் சென்று விடுவோம் என்று கூற, நாயனாரும் திரும்பிக்கூட பார்க்காமல் நடந்தார்.

அவரின் பக்தி உள்ளத்தைப் புரிந்து, சிவனடியார் நாயனாரின் பெயரைச் சொல்லி அழைக்க அவர் சுற்றத்தாரில் உயிர் பிழைத்தவர் யாரேனும் தடுக்கிறார்களோ என்றெண்ணி திரும்பிப் பார்த்தார். அப்போது இறைவன் நாயனாரின் மனைவியை விட்டுவிட்டு மறைந்தான். தன் மனைவி மட்டும் நிற்பதைக் கண்டு திகைத்து நின்றபோது, சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தேவியுடன் காட்சி தந்து அருளினார். பிறகு இறைவன் திருவருளால் அவ்விருவரும் சிவலோக பதவி பெற்றார்கள்.

Suddenly he heard the Brahmin calling out his name. When he rushed back, the Brahmin was not to be seen anywhere. He had disappeared and only his own wife was to be seen. In the next instant, Lord Shiva and Goddess Parvathi appeared before the couple and blessed him.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0