துடைப்பமும் பிறப்பும்
மரணப்படுக்கையில் கிடந்தான் ஒரு கிழவன். கர்நாடகத்தைச் சேர்ந்தவன் அவன். கடைசி மூச்சுவிடும்முன் ஓரிரு வார்த்தைகளை உளரத்தான் அவனால் முடிந்தது.
பிள்ளைகளால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்து, அவர் நன்றாகப் பேசுவதற்குரிய பிராணவாயு அல்லது மாற்று மருந்து கொடுக்கும்படி வேண்டினர். அவர் சேமித்து வைத்த பணத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்பதைத்தான் எங்களிடம் அவர் கூற முயல்கிறார் என்று மருத்துவரிடம் எடுத்து இயம்பினர்.
அவரைச் சரியாகப் பேசவைக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து பார்த்தனர். ஆனால் ‘க’ என்ற சப்தம் மட்டுமே தெளிவாகக் கேட்டது. எனவே அவர்கள் கனகம், (பொன்) கன்று, களஞ்சியம், கசபர்க்கே.. (துடைப்பம்) ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் காட்டினர். துடைப்பத்தைக் காட்டியவுடன் தலை அசைந்தது; அவரும் இறந்துவிட்டார். எனவே அவர் அடுத்தபிறவியில் துடைப்பமாகப் பிறப்பார். அதைத்தானே அவர் கடைசியாக நினைத்தார்.