ஸ்ரீ சத்யசாயி தெய்வம் (பாபாவின் 95-வது பிறந்தநாளில்)

  • சுவாமியுன தகவைத் திருநாளென்றுமே உவகை,
  • உவப்பு வியப்பே, மகிழ்வு, மகிழ்ச்சிதானே !
  • சாயி நாமம் ஒன்றே போதும் சங்கடங்கள் தீர்ந்திடும்
  • தாயுமாகிநின்று நமது சந்ததிகள் காத்திடும்
  • மாயி மகமாயியாக மங்கலங்கள் தந்திடும்
  • நம் மாயை போக்க மாயனாக மகிமைகளைச் செய்திடும்
  • ‘நானிருக்கப் பயமே’னென்று நா மணக்கச் சொல்லிடும்
  • சாயின் ‘நான்’ இருக்கக்கூடாதென்றே நாம் நடந்து காட்டினால்
  • தானிருப்பதை யுணர்த்தித் தானாய் வரமளித்திடும்
  • கானாமிர்த வேதாமிர்தமாய் தேனாமிருதசாயி
  • கருணை தேடி வந்து காத்திடும்
  • பர்த்தியில் தானவதாரம் பார்தனிலே புகழாரம்
  • பார்த்திபனின் பதமலர்தான் புவிதனிலே ஆதாரம்
  • பரந்தாமன் கண்மலரில் கருணைமட்டும் நிரந்தரம்
  • சேதாரமில்லையெனச் சேர்ந்தே களித்திடுமிது சத்தியம்
  • மாதா ஆயிரம் சேர்ந்தாலு மீடில்லை சாயன்னைக்குத்
  • தாமாய்த் தேடி வந்து செய்யுங் கருணைதா னென்றைக்கும்
  • இறங்கி, இரங்கி, வந்தே காத்தருளும் அன்பு
  • அடைக்கலத் தெய்வம்
  • ஊண், உறக்கத்திலும், உயிராய் உணர்வில் வந்து
  • நேசித்திடும் நேயம்
  • சத்யசாயிநாத னன்பின், சத்திய மென்றுமே சாத்தியம்
  • நல்லனமட்டுமே நயமாய், நியாயமாய் நிறைவேற்றிடும்
  • நித்தியம்
  • அல்லன செய்தோர்க்கு, மன்புடனானகரிசனம்
  • பின்னெப்போது மவரகந்தனில், நீங்கமாட்டாரதுவே
  • சாயின் சங்கல்பம். கோடானு கோடி
  • பக்தர்களுணர்ந்தனரவை களெண்ணிலடங்கா
  • அத்துனையன்பர்க்கும் பயக்கரமதிலாசி
  • யுந்தந்திட்ட தத்துவம்தானே
  • அன்புக்கருணையாம்சாயிதெய்வம்
  • இத்துனைதானென் றியம் பிட வியலாதிவ்வுலகில்
  • நற்றுணையாற்றி வருமற்புதங்கள், வியாபக விந்தைகளே
  • விந்தைகளே
  • உலகசாயி பக்தர்களுள மகிழ்ந்து, மனம் நிறைந்து
  • மகிழும் நாளிந்நாள்
  • திலகமாம் சத்யசாயினுலகம் தானே பிரசாந்தித் தலம்.
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0