ஆடிப்பூரம்

  • ஆடிப்பூரம் நன்னாளில் அசைந்து ஆடி வருகிறாள்
  • அன்னைசாயி பராசக்தி
  • சதி தேவி உமையவள் மீனாள் பார்வதிதேவியாய் ஆயிரம்
  • நாமங்கள் கொண்டு ஆளவருகிறாள் சாயி சிவசக்தி
  • பர்த்திபுரித் தலத்தில் பவதாரிணியாயிப் பாரெல்லாம்
  • அருள்கிறாள் அன்னை சத்யசாயி பர்த்தீஸ்வரி
  • கோதை நாச்சியாராய் கீதைப்பாதையில் வழி நடத்துகிறாள்
  • அன்னை கோதைநாயகி சாயிமாதா
  • ஸ்ரீ ராம சமேத சதி சீதாதேவியாய் சங்கல்பமளிக்கிறாள்
  • சாத்வீக சத்ய சக்தியாம் ஸ்ரீ சாயி ராதாதேவி அன்னை
  • சிவசக்தி ரூபமாய் சீலம் அளிக்கிறாள்
  • சிருங்கார ஸ்ரீ சாரதை சத்யசாயி சக்தி மா
  • காஞ்சியிலே பிறந்தவளாம், நாகையிலே பூத்தவளாம்,
  • மதுரையிலே மணந்தவளாம், நெல்லையிலே
  • சீமந்தம் செய்து கொண்டவளாம் சக்திதேவிமா
  • பர்த்திக் கருவறையில் நிரந்தர நித்யவாசமாய்ப் பரிபூரணமாய்
  • குடியிருக்கும் பக்தர் மனதினில் கொலுவிருக்கும்
  • சாயி அம்மாதேவிக்கு அனந்தகோடி ஆத்மார்த்த
  • ஆனந்த வந்தனம் தாயே
  • ஆடிப்பூரக் கண்ணாடி வளையோசையாய் விண்ணும்
  • மண்ணும் கண்ணின்மணிபோல் காத்தே
  • கடாட்சம்தரும் சத்ய சாயிமாதாவின்
  • அன்பு அருட்கருணைக்குச் சந்ததியாய்ச் சரணாகதிகள்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0