ஈசுவரம்மா எங்கள் தாயே!
- பல்லவி
 - ஈசுவரம்மா எங்கள் தாயே!
 - சாயி
 - ஈசுவரனைத் தந்தாயே நீயே!
 
- சரணங்கள்
 - கோசலை ராமனைப்பெற்றாள்
 - -நல்ல
 - கோதண்டம் ஏந்திடும்
 - தெய்வத்தைப் பெற்றாள்!
 - ஈசுவரம்மா எங்கள் அன்னாய்!
 - -நீ
 - இகபரம் காக்கின்ற
 - தெய்வத்தைப் பெற்றாய்!
 - (ஈசுவரம்மா)
 
- தேவகியும் கண்ணனைப்
 - பெற்றாள்-இங்கு
 - திசையெலாம் குழலூதும்
 - தெய்வத்தைப் பெற்றாள்!
 - ஈசுவரம்மா எங்கள் அன்னாய்!
 - -நீ
 - ஈசுவரனை அல்லவோ
 - ‘சத்யமாய்’ப் பெற்றாய்!
 - (ஈசுவரம்மா)
 
- சாயியை நீபெற்ற தாலே
 - -இங்கு
 - சகலமும் வாழ்விலே
 - பெற்றோமே யாமே!
 - ஆயிரம் தாயான தாயை
 - -உந்தன்
 - சேயாகப் பெற்றாயே
 - அம்மவோ அம்மா!
 - (ஈசுவரம்மா)
 
- மூ’வரம்’ சாயியிடம் கேட்டாய்
 - -இங்கு
 - மேவிடும் சேவைக்கு
 - விதைகளைப் போட்டாய்!
 - தெய்வமே ‘தேர்ந்திட்ட தாய்நீ’
 - -எங்கள்
 - தெய்வத்தின் தெய்வமே
 - வாழ்க நீ வாழ்க!
 - (ஈசுவரம்மா)
 
- சென்னை சுந்தரம்
 - திருக்கோயிலில்
 - பகவானுக்குச்
 - சமர்ப்பணமான பாடல்
 
- என்றும் சாயிசேவையில்
 - பொன்மணி
 - ஜெய் சாயிராம்!
 
  
  Help Desk Number: