உன் பதம் தானே

  • சிவமேயெங்களகமே சனாதன சாரதியே
  • சனாதனப் பெருந்தவப்பயனே
  • செகமே உன்னிலதிலுரையும் உயிர்களினுயர்வே ஆதியே,
  • பிறைசூடிய திருவே கங்கைகொண்ட அருளே அன்பே
  • அமரபனீஸ்வர ஆனந்தச் சோதியே !
  • அருவுருவே உனைத் தொழுதே வணங்கிடத்தான்
  • வாழ்வியலின் வசந்தம் துலங்குமே
  • வானமும் பூமியுமான வுன்அன்பினுக்கேது எல்லை
  • அகிலத்தை யருள்வெள்ளத்தில் நனைக்குமே
  • வுன்னருட் கருணை மழையே
  • ஸ்ரீ சாயீஸ்வர சிவமேயென் சீவனில் நீ யிருந்துன்
  • வழிநடந்திட நீயே நடத்திட, அருள்தர வரவேண்டும்
  • மதம்கொண்ட மனத்தினையடக்கு
  • முன்பதம்தானே நிதம் நிசமாம்
  • நித்ய சாஸ்வத நிர்மல சத்தியமாமது
  • உன் சர்வ பரப்பிரும்மமாம் சத்தியமேஅத் தர்மமாம்
  • உன் மலரடி தொழுதிட உன்பதம் நீ தந்திட
  • ஆத்மாவும் சுகம்பெறுமாம், அதுவே உன் சரணாகதமாம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0