உன் வியாபகம்
- அலைகடலின் ஆர்ப்பரிப்பில் ஆழ்கடலின் அமைதியில்
- உன் வியாபகம்
- விலை மதிப்பில்லா உன் அன்புக் கருணை தானே
- என்றைக்கும் உன் கரிசனம்
- உன் லீலா வினோதங்கள் ஒவ்வொன்றும் அதிசயம் அற்புதம்
- என்னை உன் பதமலரடிபணிந்திடப்
- பணித்ததுன் சாந்நித்தியம்
- ‘நான் இருக்கப் பயமே’னென் றபயமளிப்பதுவுமுன் சாத்வீகம்
- நித்திலமாய் நிர்மாலமாயுனை நினைந்து நெக்குருகித்
- தொழுவதுவே ஜென்ம சாபல்யம்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையே,
- உன் பக்த அன்பர்களின் ஆதாரம்
- சேதாரம் ஏதுமிலையுனைச் சேவித்தலின்றிப்
- பணி ஏதுமில்லை, பிணியும் யாதுமில்லை
- ஞாயிறில் புதுவிடியலாய் உதயமாய் உயிர்களுக்கு
- உன்னத வாழ்வளிக்க வரவேண்டும் சாயீசா
- ஞாலமும் நீயாகிக் கோள்களுமுன் சிருஷ்டியாகிச்
- சீலமும் தானாகிச் சீர்மிகு பர்த்தியின் கருவறைத்
- தெய்வமாகிக் கவசமாய்க் காத்தருளும் பர்த்தீசா
- பரப்பிரும்மன் உனக்குப் பரமார்த்த ஆனந்த வந்தனம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்