எல்லாம் அழகு
- நந்தவனப் பொய்கையில் புதுப்பூவாய் மலர்ந்திருக்கும்
- கமலத்திலுன் முகமலரில் நீ சிந்தும் புன்னகை அழகு
- நொந்த மனதினிலுன் கருணையால் சொந்தனாய்
- நீ கிட்டியதும் அழகுதான்
- பந்தமாகியுன் பதந்தொழுது பணித்தவர்க் குன்பாந்தம்
- பரிசாய் வந்தது அழகுதான்
- நிந்தித்தாரையும் உனைச்சந்திக்கச் செய்யுமுந்தன் சங்கல்பம்
- பாக்கியம் தருவது அழகுதான்
- வல்வினைகள் வராது தடுத்தாட்கொள்வது அழகு
- சொல்லுமுன் ‘நானிருக்கப்பயமேன்’ எனும் சொல்
- வார்த்தை அழகுதான்
- சித்திரைச் செவ்வானத்தில் சாயி மேகங்கள் நகர்வதழகு
- மழை பொழிவித் துயிர்களுக்களிக்கும் கருணையுமழகுதான்
- சீரடியில் சீரடி வைத்துச் சிவமாகிப் பர்த்தியிலவதரித்து
- சிவசக்தியுமாய்ச் சீலமளித்தது அழகு
- ஓரடி பக்தர் நடக்கத் தேடி நாடி வந்து
- அபயமளிப்பதும் அழகுதான்
- பாதைகள் பலவாயினும் சேருமிடம் சுகமாவதழகு
- உன் கீதைப்பாதையாய் வழிநடத்தலே அழகுதான் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: