ஓம்கார ஸ்வரூபம்
- கொம்பொடித்துக் கோலத்தமிழ் எழுதிய ஓம்கார ஸ்வரூபமே
- கொம்புத்தேனாய்த் தீந்தமிழ்தான் சுவையும் கூட்டுமே
- கோலமயில் முருகனின் குங்குமச் சிரிப்பிலும் கலைநயமே
- மூல முதல்வன் முக்கண்ணன் புதல்வனே பவதார நாயகமே
- நான்கு பொருள் தந்து மூன்று தமிழ் கேட்ட
- அவ்வைக்கும் அருளினாய்
- நான்கு வேதத்தின் பொருளாய் நானிலத்திற்கு
- நற்பவியே நல்கினாய்
- நானாவித அலங்கார அபிஷேகங்களில்
- அழகாய்த் தெரிகிறாய்
- ‘நான்’ அகல நல்வழிகாட்டியே நற்றுணை ஆகினாய்
- அருகம்புல்லையும் அருமருந்தாக்கி அகிலத்தில்
- ஔஷதமாக்கினாய்
- சிறு மூஞ்சூறுவையும் உனக்கு வாகனமாக்கி
- விவேகமாகினாய்
- மோதகப் பிரியனாய் அவல், கற்கண்டுண்டு, களிப்பாகினாய்
- சாதகமாய்ச் சங்கல்பம் அருள எங்கும் அமர்ந்துள்ளாய்
- சாயி கணேசனாய்ச் சாஷ்டாங்கமா
- யுனைத் தொழச் சரணாகதியளிக்கிறாய்
- முப்போதும் நீ துணை நின்று எப்போதும்
- வழித்துணையாய் வந்து தப்பேதும் நடந்து விடாமல்
- வாழ்வியலில் வலம் வரவேண்டும்
- ஒன்றே குலம் ஒருவனேதேவன் இன்றே நன்றே
- அப்பரப்பிரம்மமே நீயானாய்
- கன்று தேடி வரும் தாய் போல் உன்னை நாடி என்றும்
- பண்கள் பாடி வந்துனைத் துதிக்க நல்வரம்
- தந்தருள்வாய் சாயி
- அடைக்கல முந்தன்அன்புப் பதமலரடியில் படைக்கலமாய்க்
- கவிப்பண்கள் புனைந்திட நிலைக்களமாம் உந்தன்
- பர்த்திப் பதிதனில் கலைக்களமாம்
- பிரசாந்தியிலுன்னைக் காண வேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: