கணபதி தம்பி நீ

  • சாயி முருகா என்று சொல்லிவிட்டால்
  • சங்கடங்கள் தீர்ந்து விடும்
  • வேல் முருகா என்று வேண்டி நின்றால்
  • வேதனைகள் குறைந்து விடும்
  • மால்மருகா என மனது நினைக்க
  • மாறாத இன்பம் வந்து வருடி விடும்
  • குமரா என்று குரல் கொடுத்தால்
  • குன்றிலிருந்திரங்கி, இறங்கியே வந்தருள்வாய்
  • வெள்ளிமலை மன்னவனின் இளவளே
  • யெனவிளிக்க விரைந்து வந்து,
  • வேலில் முருகவேளாய் விடை தருவாய்
  • கணபதி தம்பி நீ நவநிதி குணநிதி குமரேசனே
  • சத்யசாயி முருகா என்று எண்ணித் துதிக்கத்
  • துன்பங்கள் பறந்துவிடும் – நீ
  • வள்ளி தெய்வயானை சமேத தேவசேனாபதி கந்தனே
  • பிரசாந்தி சுப்பிரமணியசாயி முருகா வந்தருள்கவே
  • பிறசாந்தி தேவையில்லையுன் பிரசாந்தி போதுமே
  • பிரதாதம், பிரசாந்தம், பிரகாந்தப் பிரசாதமே,
  • சாயி உன் சத்தியமே, நித்தியமே சாத்திய சாஸ்வதமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0