சரியான விகிதம்
கம்பீரமான ஆலமரத்திற்கு ஒரு சின்னஞ்சிறிய விதையை கொடுத்து, பூசணிக்காயிற்கு ஒரு பிரம்மாண்டமான பழத்தை வழங்கியதற்காக ஒரு மனிதன் ஒரு முறை கடவுளைப் பார்த்து சிரித்தான். “விகிதாச்சார உணர்வு இல்லை,” என்று அவன் படைப்பாளரான கடவுளிடம் கூறினான். இருப்பினும், இந்த மனிதனன் ஒரு ஆலமரத்தின் நிழலின் கீழ் ஒரு முறை தூங்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து எழுந்தபோது, தன் உடல் முழுவதும் பெரிய அளவிலான விதைகள் விழுந்திருப்பதை கண்டான். ஆலமரத்தின் விகிதத்தில் அதன் விதைகள் இருந்திருந்தால், அந்த உயரத்திலிருந்து விழும் ஒரு விதை கூட எந்த நேரத்திலும் விமர்சகனைக் கொன்றிருக்கும்! இதை உணர்ந்த அவன், தன் தர்க்கத்தின் மோசமான உணர்வுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்டு, பாதுகாப்பாக வெளியேறினான்.
ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 2, அத்தியாயம் 43. அக்டோபர் 4, 1962.