சிவ சமேதனாய்
- சுகந்த குந்தளாம்பிகை சமேத கைலாச செங்கோட்டீசனே
- குற்றாலநாதர் குழல் மொழி வாயம்மை பரமேசனே
- பரசிவப் பரமே பரசிவனே, பரமேசனே
- சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
- காஞ்சி சிவநேசனே, பஞ்சாட்சரனே, நமசிவாயனே
- உண்ணாமுலை அம்மை துணைவியாம் நடராசன் நீ
- நற்றுனை நாயகனே, நற்றவத் தேவனே
- பஞ்சசபைகளின் கனக சபாபதியே, கனக அம்பர சாயி சிவமே
- சிவனே, நீ சீவனே, அகமே, செயமே, நற்றவ, நற்பவியே
- அருட்பொருளாம் அம்மையப்பனே யுனையெப்படி
- அழைத்தாலுமுன் னருட்கருணைதானுருகிப்
- பெருகியுள்ளத்துட் புகுந்தே உயிரில்
- தானாட் கொள்ளுமே ஆதியே
- ஸ்ரீ சத்ய சாயீஸ்வரப் பர்த்தீச, சாயீசா, பரபிரம்ம முன்னைப்
- பாதார விந்தம் தொழுதிட உன் பதமலர் தரவேண்டும்
- பாங்குடனே பரமே பரவசமாக நீ பிரவேசித்துப் பிரபாவமாய்ப்
- பிரவாகமாய்ப் பிரவேகமாய் வரவேண்டும்
- சித்ராவதியின் சித்திரத் தெய்வமே எங்களின் பக்திக்கு இரங்கி,
- இறங்கி, யுன் கருணை அன்பாம்
- முத்திரை அருட்கடாட்சம் பதிக்க
- வந்தருள் புரியவேண்டும் கூடல் நகர்
- சித்திரைத் திருவிழா நாயகனே,
- ஸ்ரீ சைலேஸ்வர உடனமர் பிரம்மராம்பிகையே
- விடையேறி சிவசமேதராய்க், கயிலை நாதராய்,
- சிவகடாட்சமளித்திட வருகவே, சிவமே போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்