தனது தலையனை
புனிதமான கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்ள, பணக்கார வியாபாரி ஒருவன் சென்றான். அவனுடைய பணத்தைத் திருடும் பொருட்டு திருடன் ஒருவன் செல்வந்தனைப் பின்தொடர்ந்தான்; ஆனால் அவனோ, அதே கோவில் விழாவில் கலந்து கொள்ளச் செல்வதாகக் கூறி, நண்பனைப் போல் நடித்தான்.

அன்றைய இரவை, தர்மசாலை ஒன்றில் இருவரும் கழித்தனர். எல்லாரும் அயர்ந்து தூங்கும்போது திருடன் மட்டும் தூங்காமல் விழித்திருந்தான். மெல்ல எழுந்து வியாபாரியின் பையை எல்லா இடத்திலும் தேடினான்.

தீவிரமாகத் தேடியும் பை அவனுக்குக் கிட்டவில்லை. விடிந்தவுடன் அவன் வியாபாரியிடம் நட்புடன் பேசுவதைப் போல் “இந்த இடத்தில் திருடர்கள் அதிகம். நீங்கள் உங்கள் பணப் பையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்றான். அதற்கு வியாபாரி, “ஆமாம், உண்மைதான். நேற்றிரவு நான் அந்தப் பையை, உனது தலையணைக்குக் கீழேதான் வைத்திருந்தேன். இங்கே பார், அது எவ்வளவு பத்திரமாக இருக்கிறது”, என்று சொல்லிக் கொண்டே அதைத் திருடனின் தலையணைக்குக் கீழே இருந்து எடுத்தான். இறைவன் அந்த வியாபாரியைப் போன்றவர்.

ஆத்ம சக்தி, ஆத்ம ஞானம், கலப்பற்ற களிப்பு ஆகியவற்றைத் தன்னுள் அடக்கிய பையை, உங்கள் மூளையில் அவர் வைத்திருக்கிறார். ஆனால் மனிதனோ, இதை அறியாமல் ஆனந்தத்தைத் தேடி வெளியே அலைகிறான்.
  
  Help Desk Number: