தாயுமான சாயி முருகன்

  • சாயி முருகனுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை
  • செய்து சாஷ்டாங்கமாய்ப் பணிவோம்
  • அத் தாயுமானவன் மால்மருகனுக்குப் பல்விதப்
  • பூசனைகள் செய்து பரவசம டைவோம்
  • மாயி மகமாயி துர்காலட்சுமி சரஸ்வதியின் ரூபமாய்
  • கண்டும் ஆனந்தம் கொள்வோம்
  • சிவன் சேயனாய்க் கணபதி தம்பியாய்த்
  • திவ்யமாய்ச் சேவித்துப் பரமானந்தமடைவோம்
  • குன்றுதோறும் குமரனாகக் குடியிருப்பான்
  • நம் குற்றம் குறை பொறுத்து வாழ்வில் அருள் புரிவான்
  • மன்றிலாடும் ஈசனவன் புத்திரனாயவதரித்துப்
  • பவதாரனாகினான்
  • தென்றல் போலினிமை தந்து வாழ்வியலில்
  • வசந்தம் தருகிறான்
  • ஆறுபடைவீடுகளில் அரசாட்சி செய்கிறான் அவன்
  • ஆறுமுகம் என்ற பெயரில் அகச் சாட்சியாக
  • நிற்கிறானவன், ஏறுமுகம் தந்து ஏற்றம் புரிந்து
  • நம் வாழ்வில் மாற்றம் தருகிறான்
  • மாயையின் சீற்றம் குறைக்கின்றான்
  • ஏறிவந்தே மயில் மீதில் காட்சி தருகிறானதில்
  • நிரந்தரச் சாட்சியாக நின்றும் மீட்சி தருகின்றான்
  • மகத்தான மாட்சியாய் மிளிரச் செய்கிறான்
  • பர்த்திதனில் சாயி சுப்பிரமணிய சுவாமியாகத்
  • தும்பிக்கையோ னருகினி லழகாய்ச் சிரித்துச்
  • சிலிர்க்க வைக்கிறான் பக்தியில்
  • சுகந்தமாய்ச்சுபிட்சம் தருகிறான்
  • நற்கீர்த்தி தந்து கார்த்திகேயனாகச் சாந்நித்திய. மளிக்கிறான்
  • மூர்த்தியவன் முன்னிலையில் தொழுது பணிகிறோம்
  • புட்டபர்த்திவாசன் சாயி முருகனைச்
  • சகலதெய்வமென்று துதித்து மகிழ்கிறோம்
  • சாயி மலரடி பணிந்து சரணாகதி அடைகிறோம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0