நாடு நளினம் பெறவேண்டும்
- நலம் நல்க நாடி வரவேண்டும் சாயிநாதா
- அதில் நாடு நளினம் பெற வேண்டும்
- பலமேவுன் சனாதன தர்மந்தான் சாயிநாதா
- அதில் சாந்நித்தியம் தந்தே அருள வேண்டும்
- குலமே உன் சங்கல்பந்தான் சாயிநாதா
- அதில் நீ வலமாய் வந்தே வாழ்த்த வேண்டும்
- தலமேயுன் பிரசாந்தி மட்டும்தான் சாயிநாதா
- பிற சாந்தி வேண்டாமுன்னருட் சாந்தி
- போதுமதையும் நீ மட்டும்தான் தரவேண்டும்
- வளமே உன்னருட்க் கடாட்சம்தான் வாழ்வியலி லதை
- நீ ஆசியாய்த் தர வரவேண்டும்
- பலமே உனது சேவைகளாற்றுதலில்தான்
- உடல், உள்ள, பலம், தர உன் சங்கல்பமருள வேண்டும்
- ஐம்புலன்களுமுன் னருட்சேவைகள் செய்திட ஐயனே
- நின்னருள் அனுதினமும் அணுக்களில்
- அரங்கேற வேண்டும்
- எப்பிறவியிலும் உனைத்தொடர உன்
- அருட்கருணை தொடர்ந்திட வேண்டும்
- எப்போதுமுந்தன் நாமஸ்மரணையில் லயித்துத் திளைத்திருக்க
- உன் சாந்நித்யம் மட்டும்தான் வேண்டும்
– தமிழரசி பாலசுப்பிரமணியம்