பயமேதுமில்லை
- சிவாயநம என்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை
- சாயிசிவனே உன்அபயமிருக்கப் பயம் ஏதுமில்லை
- ‘நானிருக்கப் பயமேன்’ என்று அபயஹஸ்தம் அளித்தாய்
- நீ இருக்கக்குறை ஏது என உன் பக்தர் மனதில் பதித்தாய்
- திண்ணமாய் எண்ணப்பணித்தாய்
- எந்தை தந்தையாய் முந்தை விந்தையாயருள் செய்கிறாய்
- உந்தன் பாதார விந்தமன்புடன் தொழச் செய்கிறாய்
- எங்கள் சந்ததி தழைக்கச் சொந்தமுடன் உனை நாடப் பந்த
- பாந்தமாய்க் கருணைமழைதான் பொழிகின்றாய்
- சிவசக்தி ஸ்வரூபனே ஸ்ரீ சாயி தேவனே
- ஞாலத்தின் நல்ஞானசக்தி நீதானே
- நான்கு மறைவேதமும் நானாவித நன்மையும்
- நற்பவியுமே நீதானே நற்கதியுன் துணைதானே
- உன் பங்கையப் பதமலரடி சரணம் சரணம் ஸ்ரீ சத்திய சாயீசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்