பயமே கொல்கிறது

கிராம தேவதையான மாரியம்மன் ஒரு கிராமத்தின் மக்கள் தொகையைக் குறைத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தது. அந்த தேவதையை ஒரு சந்யாசி ஒருசமயம் வழியில் சந்தித்தார். தேவதை எத்தனை பேரை விழுங்கியது என்று அவர் அதனிடம் கேட்டார். “பத்துப்பேரைத்தான்” என்று பதிலளித்தது.

ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கையோ உண்மையில் நூறாகும். அதற்கு அது, “நான் கொன்றது பத்துப்பேரைத்தான்; மற்றவர்கள் பயத்தால் இறந்தவர்கள்” என்று விளக்கியது. மனிதன் ஆத்ம சொரூபமானவன். அபய சொரூபமாகவும் இருப்பவன். எனவே அவன் தனது உண்மையான இயல்பை அறிந்துக் கொண்டால் பலவீனமாகவோ கோழையாகவோ அவன் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0