மயிலேறி வரவேண்டும்
- குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் அழகென்ற
- சொல்லுக்கும் முருகன், மலைநிற்கும் வடிவேலன்
- மயிலேறி வரவேண்டும், சிலையாக நின்றாலுமது
- சாயிமுருகனுன் வடிவில் தெரியவேண்டும்
- கலை அறுபத்து நான்கிலும் கோலோச்சி நிற்கின்றாய்
- விலையேது கந்தாவுன் னன்புக் கருணைக்கும்
- பெருமைக்கும் ! நிலைமறந்தே நெக்குருகி
- நெஞ்சில் வைத்தே உனைத் தொழவேண்டும்
- நீ நாயன்மார்க ளறுபத்து மூவரின் பதிகங்களில் பதிந்துள்ளாய்
- அவ்வைக்கு அருந்தமிழை யழகாய்த் தந்தாய்
- ஒளஷதமா யகிலத்திலனைவர்க்கும் அருள் தந்தாய்
- புது விடியல் தந்து புத்தொளியா யருட்கருணை தரவேண்டும்
- வாழ்வியலில் சம்சார சாகரத்தைக் கடந்து நல்முக்தி பெற
- உன் கருணை நிதி வேண்டும்
- நவநிதிகளாய் நற்குணங்கள் பல பெறவேண்டும்
- நற்சேவைகளாற்றி வையத்தில் உதவி புரிய வேண்டும்
- அறுகுணம்போக்கி அல்லவை யகற்றி யுன்கருணை
- மழை பொழிந்திட நீயும் வர வேண்டும்
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமே சரணம் சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்