வெண்ணெயுண்ட அழகினை

  • ஆயர்பாடியிலுன் வேய்ங்குழல் ஒலிக்கும்
  • கோவர்த்தன கிரியிலுன் வேணுகானம் இசைக்கும்
  • பிருந்தாவனத்தில் உன் மோகனகானம் அழைக்கும்
  • மதுராபுரியிலுன் மதுரக்குழலோசை மயக்கும்
  • யமுனா தீரத்திலுன் சாகசம், விளையாட்டு,
  • குறும்புத்தனம், வியக்க வைக்கும்
  • பிருந்தாவன நந்தவனத்திலுன் ராசக் கிரீடையும் ஆனந்திக்கும்
  • உன் காளிங்க நர்த்தனத்தில் கலைநயம் மிளிறும்
  • பூதனை சம்ஹாரம் பூமி வானம் வரை வியாபித்திருக்கும்
  • குசேலருக்கருளிய உன் நட்பின் இலக்கணத்தைச்
  • சரித்திரம் ரசிக்கும், லயிக்கும், அவல் படைத்து மகிழும்
  • நீ வெண்ணையுண்ட அழகினை, அழகுதனை ஆயர்பாடியின்
  • அனைத்துக்கண்களும் கண்டு மகிழ்ந்திருக்கும்
  • கோவர்த்தனகிரியை நீ குடையாய்ப் பிடித்ததில்
  • பசுக்கூட்டங்களும் பரவசமானதே
  • கம்சவதத்தில் அம்சவர்த்தனன்
  • உன் தசாவதாரமும் உணர்ந்ததே
  • யசோதையிடம் நீ வளர்ந்த புனிதப்பாசம் பர்த்தியில் சுப்பம்மா
  • அம்மாவிடமும் புரிந்து தெரிந்ததே, வியந்ததே
  • பர்த்தியிலுன் சாயிநாமம் மனதினில் மயக்கும்
  • வியக்கும் இசைக்கும் லயிக்கும்
  • வியாபிக்கும் பிரவாகித்துப் பிரயோகித்து
  • இவ்வுலகிற்கே நன்மை பயக்கும்.
  • அனைத்தும் சாயி மயமாக்கும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0