வேத காயத்திரி
- வேத மூலாதாரமே சாயிவேத காயத்ரி தேவியுன் பாதாத்ம
- வந்தனம்தான் சத்திய சந்தியா வந்தனம்
- மந்திரங்களில் நான் காயத்திரியாக உள்ளேன்
- எனக் கண்ணனவதாரத்தி லுரைத்திட்டாய்
- விசுவாமித்திர உபதேசம் பெற்றாய், ஸ்ரீ ராம அவதாரத்தில்
- வேதசாரத்தில் த்ரயியில் சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி,
- அஷ்ட லட்சுமிகள் மனோன்மணி வடிவங்களாய்
- வந்துதித்த தாயே சாயி தேவி
- ஸ்ரீ வேத மாதா காயத்ரிதேவியாயுன தருக் கடாட்சமளித்திட
- ஞாயிறாய், ஞானமாய், ஞான ஒளியாய் ஞானதீபமாய்
- ஞாலமதில் வந்தருள் தந்திடுவாய்
- அஞ்ஞான இருளகற்றி மெய்ஞான மருளிடப் பிரசாந்தி
- நிவாஸினி ஆத்ம நிவாஸினி
- ஸ்ரீ சத்ய சாயிதேவியாய்ச் சகலர்க்கும்
- உன் தெய்வீக அன்புக்கருணையளித்திடத்தான்
- வருவாயே தாயே சாயிமாதா
- பர்த்தீஸ்வரியே போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்