சிவ சமேதனாய்

  • சுகந்த குந்தளாம்பிகை சமேத கைலாச செங்கோட்டீசனே
  • குற்றாலநாதர் குழல் மொழி வாயம்மை பரமேசனே
  • பரசிவப் பரமே பரசிவனே, பரமேசனே
  • சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
  • காஞ்சி சிவநேசனே, பஞ்சாட்சரனே, நமசிவாயனே
  • உண்ணாமுலை அம்மை துணைவியாம் நடராசன் நீ
  • நற்றுனை நாயகனே, நற்றவத் தேவனே
  • பஞ்சசபைகளின் கனக சபாபதியே, கனக அம்பர சாயி சிவமே
  • சிவனே, நீ சீவனே, அகமே, செயமே, நற்றவ, நற்பவியே
  • அருட்பொருளாம் அம்மையப்பனே யுனையெப்படி
  • அழைத்தாலுமுன் னருட்கருணைதானுருகிப்
  • பெருகியுள்ளத்துட் புகுந்தே உயிரில்
  • தானாட் கொள்ளுமே ஆதியே
  • ஸ்ரீ சத்ய சாயீஸ்வரப் பர்த்தீச, சாயீசா, பரபிரம்ம முன்னைப்
  • பாதார விந்தம் தொழுதிட உன் பதமலர் தரவேண்டும்
  • பாங்குடனே பரமே பரவசமாக நீ பிரவேசித்துப் பிரபாவமாய்ப்
  • பிரவாகமாய்ப் பிரவேகமாய் வரவேண்டும்
  • சித்ராவதியின் சித்திரத் தெய்வமே எங்களின் பக்திக்கு இரங்கி,
  • இறங்கி, யுன் கருணை அன்பாம்
  • முத்திரை அருட்கடாட்சம் பதிக்க
  • வந்தருள் புரியவேண்டும் கூடல் நகர்
  • சித்திரைத் திருவிழா நாயகனே,
  • ஸ்ரீ சைலேஸ்வர உடனமர் பிரம்மராம்பிகையே
  • விடையேறி சிவசமேதராய்க், கயிலை நாதராய்,
  • சிவகடாட்சமளித்திட வருகவே, சிவமே போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0