சாயி துர்கா

  • ஆதாரம் நீதானே சாயி துர்க்கா சாயிமா
  • சேதாரம் ஏதுன் பாதார விந்தம் பற்றினோர்க்கே
  • கேதாரனின் பாதி நீ பிரகதாம்பிகைத்தாயே சாயிமா – உன்
  • பாதார விந்தம் பணிந்திடப் பாங்குடன் பரமனுடன்
  • வந்திடுவாய்
  • நவராத்ரி நன்னாளில் நாயகியாய் வந்தே
  • நல்லருள் தாருமம்மா நல்லொளி ஒளிர்கவே
  • நாடு நலம்பெற, உயிர்களுய்வு பெற, உன்னாசி
  • வேண்டுமுன் காட்சிதான் பெற வேண்டுமதிலுமுன்
  • சாட்சிநிலை பெற வேண்டும்
  • மாட்சியாயுன் அருள் காத்தருள வேண்டும்
  • நித்திய தரிசனமாய் வருகவே, நிறைவு தருகவே.
  • நவகோள்களிலுன் ஆட்சி, நவரசங்களிலுன் பாவம்,
  • அறுருசிகளிலுன் சுவை சாட்சி,
  • சும்ப, நிசும்ப, மகிஷ, வதம் செய்த நவ சண்டிகை யுன் மீட்சி
  • சதேவர்களைக் காத்துத் தேவியுன் மகாத்மீய சாக்ஷாத்காரமானது
  • சசாயிதேவியாய்ப் பர்த்தீஸ்வரி, பரமேஸ்வரி, சண்டிகையாய்ச்
  • சசகலமுமாய்ச் காத்தருள வர வேண்டும்,
  • சஸ்ரீ சத்யசாயீஸ்வரியே போற்றி, போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0