ஊரோடும் மலையேறுவோம்
- வேலோடும் விளையாடும் வேல்முருகன் பெயரைச்சொல்லி
- ஊரோடும் மலையேறுவோம்
- உறவுடன் சுற்றம் நட்பாய்க் காவடிச் சிந்து பாடிக்
- காவடிகள் கொண்டு சென்று ஆடிக்களித்திடுவோம்
- மால்மருகன் முருகனைவேல்மாறல் பாடிக்கொண்டு
- அவனருளை வேண்டியே துதித்திடுவோம்
- மயில் மீது ஏறி வந்து சந்தனம் மணக்கவே
- நம்மனதோடு பேசவைப்போம்
- கந்தன் கவசமாய்க் காத்தேதான் கருணை செய்வான்
- பஞ்சாமிர்தம் தந்து பால் பழம் பன்னீரில்
- பாங்காய், பரவசமாய்ப் பக்தி செய்யலாம்
- துளிக்கண்ணீர் வர விடாமல், கடுகளவும் சோராமல்
- கருணை புரிய வருவான் கந்தன்
- பிரணவம் சொன்னதுபோல், பிரளயமும் காத்துநின்று
- வருதுன்பங்கள் நீக்கித் தந்து வந்த பிணிக்கும் மருந்தாகி
- நம் மகிழ்வுக்கும் விருந்தாவான் முருகன்
- நம்மை மகிழ்வித்தே மலர்ந்திடுவான் மால்மருகன்
- பர்த்தித்தலமதனில் பார்கூடிப் பஜனைகளும் பாடியே
- முருகனைத் துதித்திடலாம், சத்தியசாயியைப் பணிந்திடலாம்
- சகலமும் நீயெனச் சர்வமும்தான் நீயெனச்
- சாயிநாத முருகனைப் பணிந்தெழலாம்
- ஸ்ரீ சத்தியசாயி முருகனுக்கு அரோகரா அரோகரா வென்று
- அழகாய்ச் சொல்லித் தொழுதிடுவோம் – நம்
- பாபாவின் ஆனந்தக் கருணையில் திளைத்திடுவோம்.
- பிரசாந்தி சுப்பிரமணியனைச் சுபிட்சமாய்க்
- கொண்டாடிப் பண்பாடி வணங்கிடுவோம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்