ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!

  • அவர்பெற்றார் இவர்பெற்றார்
  • அவையெல்லாம் குழந்தைகளே!
  • இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா
  • எனும்பெயரைக் கொண்டபெருந்
  • தவள்பெற்றாள் தான்பெற்றாள்
  • தரணியெலாம் உய்ந்திடவே
  • சிவம்பெற்றாள் சக்தியினைச்
  • சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்!
  • நோயுற்றார் பிணிதீர்ந்தார்
  • நோற்பாரோ தவம்தீர்ந்தார்
  • போயுற்றார் புட்டபர்த்திப்
  • பொன்னகரை, ஈஸ்வரம்மா
  • தாயுற்ற தவப்புதல்வன்
  • தன்னிகரில் லாத்தலைவன்
  • சாயீசன் சன்னிதியில்
  • சன்மமிலா வாழ்வுற்றாரே!
  • நீலவொளிச் சிறுபந்தாய்
  • நிமலமகள் கருப்புகுந்தான்
  • ஆலமதை அருந்தியவன்
  • அவள்மடியில் அமுதருந்த!
  • சீலமிகும் ஈஸ்வரம்மா
  • செய்ததவம் எவர்செய்தார்
  • பாலகனாய்ப் பரமனையே
  • பரிவுடனே வளர்த்தெடுக்க!
  • நாமகிரி நல்வயிற்றில்
  • “நாதனவன் வருவன்”என
  • ஆமந்த அவதூதர்
  • அறிவித்த காரணத்தால்
  • “நாமமினி ஈஸ்வரம்மா!”
  • நவின்றாராம் கொண்டமரும்;
  • பூமகளின் புகழ்மகனே
  • போற்றுகநின் திருநாமம்!
  • போற்றுகநின் பூம்பாதம்
  • போற்றுகநின் பெருங்கருணை
  • போற்றுகநின் ஞானமொழி
  • போற்றுநின் பொற்கரங்கள்
  • போற்றுகநின் மெய்யருளால்
  • பொலிவுற்ற வேதவழி
  • போற்றுகவே ஈஸ்வரம்மா
  • பொற்கருவில் வந்தஇறை!
  • மதுரபாரதி
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0