நீர் இன்றி அமையாது மனது
- பரப்பிரம்மம் உன்னை நினைத்தாலே கருணையுடன்
- வந்திடுவாய்
- இகபர சுகம் தந்தினியன நல்கிடுவாய்
- பராபரனுன் பதமலர் தொழுதிடப் பாவவினை களகலும்
- பஞ்சாட்சரனுன் பர்த்திப் பிரசாந்தி வலம்வர நலங்கள்
- யாவும் கூடும்
- தயாபரனுன் தயையின்றித் தரணியிலேது மியங்காது
- கருணாகரனுன் கருணையின்றிக் காலம் கனிந்து வராது
- ஏடெடுத்தெழுதும் கவியில், நீதான் மொழியாவாய் சேர்ந்து
- பரவசமாயுனைத், துதித்துப் பாடும் பாக்களில் நீ ராகமாவாய்
- பன்மதப்பக்தர்கள், பன்மலர்கள் சாற்றித் துதித்தாலதன்
- நறுமணமே நீயாவாய் சுகந்தமாய்
- கடல் அலைகளின் அலையோசையில் சங்கம நதிகளின்
- சலசலப்பில், பச்சைப் பயிர்களின் பசுமையில்
- இயற்கையன்னையின், முழுதான எழில்களிலனைத்து
- மாயிருந்தும், வசந்தமாயழ கூட்டுவாய்
- மாதா, பிதா, குரு, தெய்வம், ஆன்ற நட்பு, சுற்றமுமாயிருந்து
- ஆத்ம பலமளித்து, ஆன்ம சுகமளித்தருட் சுகம் தருவாய்
- நீரின்றியமையாது உலகு
- சாயி நீர் இன்றி அழகாகாது உயிரே, ஆத்மாவே, சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்