தையல்நாயகித் தாயே

  • தையல்நாயகித் தாயும் நீயே, தையல்களின் மஞ்சள்
  • குங்குமத் திருமாங்கல்யத் திருஉருவும் நீயே
  • மையலுன் கருணையைக் கண்டு கொண்ட
  • பக்தர்களடைந்ததும் ஏராளம், அதுவுன் தாராளம்
  • மூவுலகும், முத்தேவியரும், முத்தமிழும், முக்கனியும்,
  • மூவின்பமும், உன்னருட்கொடைதான் சாயிமா
  • இரு வினைகளின், மும்மலங்கள் நீக்கியே நான்மறைகளின்
  • சாரங்க ளாயன்புப் பூமாரி தானருள்கிறாய்
  • இருவழியிலு மிருளகற்றி இனியவை தந்து நற்பூக்கள்
  • மாலை, மழையாய் வர்ஷிப்பாய்
  • முப்போதும் எப்போதும் தப்பாது நீவந்துன்னருட்
  • கழல்கள் தொழத்தருவாய்
  • ஐந்தொழில்பூதங்க ளைந்தின், ஏகனின் பாதி நீ, ஐங்கரன்
  • இளமுருகன் அன்னை நீ,
  • அங்கையற்கண்ணியா யகிலாண்டகோடி
  • பிரம்மாண்டநாயகியா யகிலத்தை ஆட்சி செய்யும் சாயிஸ்வரி
  • சாயிமா உன் பொற்கமல மலர்ப்பாதம் பணிந்திடச்
  • சாயி பார்வதி தேவியே நீ வருவாயே
  • சரணம் போற்றி போற்றியே சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0