வேத காயத்திரி

  • வேத மூலாதாரமே சாயிவேத காயத்ரி தேவியுன் பாதாத்ம
  • வந்தனம்தான் சத்திய சந்தியா வந்தனம்
  • மந்திரங்களில் நான் காயத்திரியாக உள்ளேன்
  • எனக் கண்ணனவதாரத்தி லுரைத்திட்டாய்
  • விசுவாமித்திர உபதேசம் பெற்றாய், ஸ்ரீ ராம அவதாரத்தில்
  • வேதசாரத்தில் த்ரயியில் சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி,
  • அஷ்ட லட்சுமிகள் மனோன்மணி வடிவங்களாய்
  • வந்துதித்த தாயே சாயி தேவி
  • ஸ்ரீ வேத மாதா காயத்ரிதேவியாயுன தருக் கடாட்சமளித்திட
  • ஞாயிறாய், ஞானமாய், ஞான ஒளியாய் ஞானதீபமாய்
  • ஞாலமதில் வந்தருள் தந்திடுவாய்
  • அஞ்ஞான இருளகற்றி மெய்ஞான மருளிடப் பிரசாந்தி
  • நிவாஸினி ஆத்ம நிவாஸினி
  • ஸ்ரீ சத்ய சாயிதேவியாய்ச் சகலர்க்கும்
  • உன் தெய்வீக அன்புக்கருணையளித்திடத்தான்
  • வருவாயே தாயே சாயிமாதா
  • பர்த்தீஸ்வரியே போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0