பரமன் பாதம்
- சுந்தர பாதம் சுகம் தரும் பாதம்
- இடர்களைந்து சுடர்தரும் சுகந்த பாதம், சுகிர்த பாதம்
- தொடர் வரும் இன்னல்கள் படராதருளும் அமிர்த பாதம்
- எதிர்வரும் துன்பம்போம், புதிராய்ப், புதிதாய், நல்லன
- நல்கும் புனிதப்பாதம்
- பக்தரிதயத்தில் கொலுவிருந்து காக்கும் நவசக்திப்பாதம்
- சத்சித்தானந்தமளித்துக் காத்தருளும் பங்கயப்பாதம்
- சித்ராவதி தீரத்திலே அற்புதங்கள் புரிய
- நடந்திட்ட நர்த்தனப் பாதம்
- முத்திரை பதிக்கவைக்கும் கவசமாய்க்
- காவல் காத்திடும் நவநிதிப் பாதம்
- சந்ததிகளை ஆல்போல் தழைத்து வளர்விக்கும்
- தர்ம தயைப் பாதம்
- சகலருக்கும் சகல நன்மைகளும் நல்கும் சாத்வீகப் பாதம்
- சங்கடங்கள் தீர்த்து நற்பவி அளிக்கும் சங்கீதப் பாதம்
- ஸ்ரீ சத்யசாயி சர்வ பரப்பிரம்மப் பாதம் – சாயீசா சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்