கருணை வரமளிக்க

  • பூங்கமலமுன் வதனம் பொழிந்திடுமுன் அன்பைக்
  • கருணை நயனப் பார்வையில்
  • கற்பனைக்கெட்டா வுன்னருள் அற்புத மகிமைகளைக்
  • காணக் கண்கோடி வேண்டும்
  • செவிகுளிரக் கேட்டிட நற்பவியுமே உன்
  • சங்கல்பமாய் வேண்டும்
  • நாவின் இனிமையா யுன்நாமஸ்மரணை பஜன்பண்கள்
  • பாடி மனங்குளிர வேண்டும்
  • கண் மூடி ஜப தபதியானங்களி லுன்னெழில்
  • தரிசனங் காணவேண்டும்
  • உனை நினைந்தாலே நெக்குருகிக் கண்களில்
  • நீர் சோர வேண்டும்
  • ஆனந்தக் கண்ணீராலுன் செங்கமல மலர்ப்பாதம்
  • தொழுதிடல் வேண்டும்
  • முப்போதும் எப்போதுமுன் நினைவு நீங்காமலுனை
  • யெண்ணித் துதித்தல் போதும்
  • அகமதில் இச்செகமதில் வாழும் வரையிலுன்
  • அன்புக் கருணை வரம் தயை வேண்டும்
  • கண்ணிமைகளாய்க் காக்கின்றாய், கரம் சேர்க்கின்றாய்
  • கடவுளுனையே உணர வைத்தாய்
  • உள்ளுணர்விலூடுறுவியுன் சத்தியப் பாதைதனில்
  • நடக்க வைத்தாய்,
  • நீ இருக்கக் குறையேதுமில்லைதான் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0