அவதாரத்வம்
- ஸ்ரீ சத்யசாயி நாராயணா உன் சத்ய தர்ம சாந்தி பிரேமை
- அஹிம்சையாம் நாராயணமது வேதபாராயணம்
- பாற்கடலில் பள்ளி கொண்ட சயனத் வமதில்
- ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீ மகாலக்ஷ்மிகரம் சேர்த்து
- தசாவதாரம் தந்த அவதாரத் வமதில் சாயி ராமனின் சங்கல்பம்
- எண்திக்கிலுமொலிக்கும் சாயி நாமமது
- சாயி ராமனின் ஆத்ம தத்துவம்
- அனைத்த வதாரத்திலுமே வாழ்வியலின் ஆதாரத்வமதிலே
- பர்த்தியம்பதியிலுன் சாயி ராமனெனும்
- ஆகர்ஷணமது சத்திய தர்ம
- ஆத்ம சனாதனம், சமாதானம், சமதர்மம்
- ஸ்ரீ சத்ய சாயி ராமத்வம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூப அவதாரத்வம்
- இச்செககத்திற்குக் கிட்டிய சாயி ராமமெனும்
- அவதார மகத்துவம்
- உன் விபூதிதானளிக்குமே அதிசய ஆச்சர்ய மகிமைத்வமே
- உன் பதமலரடி பணியக் கிட்டிடும் சுகானுபவம்
- உனது நயன தீட்சையளித்திடுமாம் புனிதநேத்ராத்வம்
- தரிசனமதிலுனைக் கண்டால் பிறவிக்குக் கிட்டிடும்
- தர்ம சம்வர்த்தனம்
- உன்னுடன் சம்பாஷிக்கும் பாக்கியம் சந்ததிகளுக்கேதான்
- சாட்சாத்காரம், சங்கல்பம் சாந்நித்யம் சாத்வீகம்
- ஸ்ரீ சத்திய சாயி நாராயணா உன்பத
- மலரடி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்