தீப லக்ஷ்மியாய்

  • பர்வதவர்த்தினி, ஏலவார்குழலி, நீள்நெடுங்கண்ணி,
  • அலர்மேல் மங்கை, மங்களாம்பிகை, சாரதா,
  • சாம்பவி, சங்கரி, பார்வதி,
  • குழல் மொழி வாய் அம்மை யெனச்
  • சத்திய சாயி தேவிக்குத்தான்
  • எத்தனையோ நாமங்களணி வகுக்கும்
  • உன் நாமஸ்மரணையில் தானத்தனை நலன்களும்
  • நன்மைகளாய் நலம் பயக்கும்
  • உயிரில் கலந்து ஆத்மாவியக்கு முன் வியாபகம் கண்டே
  • கார்த்திகைத் தீப அஷ்டலக்ஷ்மிகளாய் அருள்தர வரவேண்டும்
  • காசி விசாலாட்சி அன்னபூரணி பத்மாவதித் தாயாராய்
  • சாயீஸ்வரியே பிரசாந்தி வாசினி ஸ்ரீ சத்ய சாயி
  • தேவிமாதாவே உனக்கு ஆத்ம வந்தனம்
  • உன் ஆனந்த சாகர அன்பு மதம் இனம் மொழியாம்
  • சங்கமத்திருவடிகளில் சங்கமிக்கும் அனைத்து
  • பக்த நதிகளுக்கும் உனதருட்கருணையால்
  • அரவனைத்துன் அபயஹஸ்தத்தில்
  • அருளாசி வழங்கிட வருவாயே ஸ்ரீ சத்ய சாயிமா
  • நீயே சரணகதம் தாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0