ஒவ்வொருவருக்கும் தேவை தன்னம்பிக்கை
தன் மீது அன்பு செலுத்தாதவர்கள், தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தான் மேன்மேலும் முன்னேற வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் ஒருவர் கூட இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன்கூட தன்மீது நம்பிக்கை வைக்கிறான். அந்த நம்பிக்கை பண்பட்டு, வலிமை பெற வேண்டுமென்று விரும்புகிறான். ஒரு சமயம், குருவானவர் தன்னை தரிசிக்க வருபவர்களிடம் ஞானத்தைப் போதித்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் ஏராளமான கனிகள் சேர்ந்து விட்டன; அவற்றை நறுக்கிப் பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கும்படி சீடனி டம் கூறினார்.
”எல்லாம் தயாராக இருக்கின்றன. யாருக்கு முதலில் கொடுக்கவேண்டும்” என்று சீடன் கேட்டான். யாரிடம் உனக்கு மிகுந்த நம்பிக்கையும் அதிக அந்தரங்க ஈடுபாடும் இருக்கிறதோ அவருக்கு முதலில் கொடு” என்றார் குரு. அங்கு கூடியிருந்த அனைவரும் சீடன் முதலில் குருவிற்குத் கொடுத்து விட்டுத்தான் மற்றவர்களுக்குக் கொடுப்பான் என நினைத்தனர்.
ஆனால் சீடனோ அப்படிச் செய்யவில்லை. முதல் பிரசாதத்தைத் தானே எடுத்துக் கொண்டான். அப்படிச் செய்ததற்குரிய காரணத்தை மற்றவர்கள் வியப்புடன் கேட்டதற்கு:- “எனக்கு என்மீது தான் உச்ச கட்ட நம்பிக்கையும் பற்றும் உள்ளது. அதனால்தான் முதல் பழத்துண்டை நானே எடுத்துக் கொண்டேன் என்றான்.