ஞானச் சூரியன்

  • வெள்ளி முளைத்து விடிவெள்ளியாய், ஞானச்சூரியனாய்,
  • ஞாலத்திற்கு ஒளிதர வந்ததுவோ
  • பள்ளிகளமைத்துக் கல்விச் சேவைக்குப் பரிசாய்த் தந்ததுவோ
  • மருத்துவச் சேவைகளாற்றியே மக்கள்பிணி தீர்த்ததுவோ
  • குடிநீர்த் தேவைகளமைத்துத் தாகம் தீர்த்துதவியதோ
  • இசைக் கல்லூரியமைத்துப் பண் பஜன்கள்
  • இனிமை சேர்த்தது
  • கோகுலம் அமைத்து ஆநிரைகள் ஆத்மார்த்தமாய்
  • அன்பில் கருணையில் அரவணைக்கப் பெறுகிறது
  • பற்பல சேவைகள் செய்திடச் சங்கல்பமளித்துச்
  • சாஸ்வதமு மாக்கியது
  • சத்சங்கங்களில் சனாதனதர்மம் தழைக்கச் செய்தது
  • சமிதிகள் நிறுவி சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை
  • அகிம்சையில் அங்கம் வகிக்கவைக்கிறதே
  • நகர சங்கீர்த்தனத்தில் மனம் லயிக்கச் செய்கிறதே
  • நாமஸ்மரணையில் நானாவிதப் புஷ்பங்கள்
  • பூமாரியாய்ப் பொழிகிறதே
  • தபோவனம் தந்து தியானம் நிலைக்கச் செய்கிறதே
  • அன்னம்பாலித்து அருளும் தந்து அமைதியளிக்கிறதே
  • பன்மதப்பக்தர்க்கும் புகலிடமாய் அடைக்கலமாய்
  • அன்பில் ஆட்கொள்கிறதே
  • ‘சாய்ராம்’ நாமம் சொல்லி சாயிமயம் சாயிவயம்
  • சாயிபதம் சாயிலயமாய்ஆனந்தம் கொள்ளவைக்கிறதே
  • சாயி விபூதிப் பிரசாதம் சந்ததிகளைக் கவசமாய்க்
  • காத்தருளி முப்போதுமெப்போதும்
  • கவசமாய்க் கண்ணில் தெரியுமே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0