உயிரில் பதிகிறாய்
- கலை நயமும் கவி நயமும் உன் படைப்பிலே
- விலையேதுமிலையே உன்னன்புக் கருணையிலே
- மலைபோல் வரு துன்பமும் மடுவாகிவிடுமுந்தனருளிலே
- சிலையாயினும் படமாயினும் உன்
- சரணாகதிகதி என்றுமென் மனதிலே
- பேதமில்லை யுந்தன் அருள் பதிவிலே உயிரில் பதியுமே
- வேதமேதான் உந்தன் அன்பு அருள் அறவுரையிலே
- நாதமே தான் உன்தெய்வீக காந்தக்குரலிலே
- சாயி நாதனே என்றுமே நீ எங்கள் இதயக் கோயிலிலே
- நற்செயல்கள் சொற்கள் சேவைகள் நாங்கள்
- செய்வது உன் அனுபூதி
- உன் பொற்கரத்தில் நீ தருவது உன் மகிமை விபூதி
- கற்பக விருட்சத்தில் உன் லீலைகளும் ஒரு பகுதி
- நற்பவியில் நீ நல்குவது உந்தன் பக்தர்களின் சத்ய தர்ம சாந்தி
- பிரேமை அகிம்சை சேவையின் தகுதி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: