பாகுபாடு
அக்டோபர் 14, 1964 அன்று ஆற்றிய தனது தெய்வீக உரையில், விவேகத்தின் அவசியத்தை சுவாமி ஒரு சிறிய விளக்கத்துடன் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
நீங்கள் பள்ளி வழியாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் பெறும் புலமை[கற்றல்] உங்களை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும்?
நீங்கள் பள்ளி வழியாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் பெறும் புலமை[கற்றல்] உங்களை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும்?
ஒவ்வொரு காசோலையிலும் “ உங்கள் அன்பு மனைவி” என்று கையெழுத்திட்டு, அது நிராகரிக்கப்படுவதை எண்ணி ஆச்சரியமுற்றாள்.
இயல்பான தழுவுதல், மாறிய சூழ்நிலையை பற்றிய புரிதல், ஒரே மாதிரி தென்படும் ஒத்துபோகிற விஷயங்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் உண்மைக்கும் நகலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் அறிவு ஆகியவை ஒருவரிடத்தில் இயல்பாகவே இருக்க வேண்டும்.
நாம் செய்யும் செயலின் குறிப்பறிந்து , தம் திறனை சூழ்நிலைக்கேற்ப வேறுபடுத்தி பயனுற செயல்படுத்த வேண்டும்.
கடிதத்தின் கடைசியில் இடும் கையொப்பத்திற்கும், காசோலையில் இடும் கையொப்பத்திற்கும் வேறுபாடு அறிந்து செயல் படுதல் அவசியம்.
ஆதாரம்: சத்ய சாய் பேசுகிறார், தொகுதி 4, அத்தியாயம் 34